கேம் சேஞ்சர் பட பாடல்களின் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா? தயாரிப்பாளருக்கு ஷாக் கொடுத்த ஷங்கர்

First Published | Dec 24, 2024, 1:57 PM IST

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் பாடல் காட்சிகளை இயக்குனர் ஷங்கர் மிகப்பெரிய பொருட்செலவில் படமாக்கி இருக்கிறாராம்.

Shankar, Ramcharan

தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இதுவரை கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் ஆகியோரை வைத்து படங்களை இயக்கிய ஷங்கர் முதன்முறையாக டோலிவுட்டுக்கு சென்று அங்கு நடிகர் ராம் சரணை நாயகனாக வைத்து ஒரு பிரம்மாண்ட படத்தை இயக்கி இருக்கிறார். அப்படத்தின் பெயர் கேம் சேஞ்சர். இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார்.

Game Changer

கார்த்திக் சுப்புராஜின் கதையை தான் கேம் சேஞ்சர் படமாக எடுத்திருக்கிறார் ஷங்கர். அரசியல் கதையம்சம் கொண்ட இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். சுமார் 450 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகை அஞ்சலி, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் பொங்கல் விருந்தாக வருகிற ஜனவரி 10ந் தேதி திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... சங்கரை கைவிட்ட இந்தியன் 2; ஆனா கேம் சேஞ்சர் அப்படி இல்ல - ரிலீசுக்கு முன் படைத்த சாதனை!

Tap to resize

Ram Charan, Kiara advani

கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்திலும் தன்னுடைய வழக்கமான பார்முலாவை தான் பாடல்களுக்கு பயன்படுத்தி இருக்கிறார் ஷங்கர். அதன்படி கேம் சேஞ்சர் படத்தில் குத்துப் பாட்டு, மாடர்ன் பாடல், ஃபாரின் பாடல் ஆகியவை இடம்பெற்றுள்ளனர். படங்களுக்கு எவ்வளவு மெனக்கெடுகிறாரோ, அதே அளவு தன் படத்தின் பாடல்களுக்கும் மெனக்கெடும் இயக்குனர் ஷங்கர், கேம் சேஞ்சர் பட பாடல்களை மிகப்பெரிய பொருட்செலவில் படமக்கி உள்ளார்.

Game Changer Song Budget

அதன்படி இப்படத்தில் இடம்பெறும் 5 பாடல்களுக்காக மொத்தம் ரூ.96 கோடியை செலவழித்து உள்ளாராம் ஷங்கர். குறிப்பாக ரூ.23 கோடி செல்வழித்து செட் போட்டும் ஜருகண்டி பாடலை பிரம்மாண்டமாக படமாக்கி உள்ளனர். இதர நான்கு பாடல்களுக்கும் இதுபோன்று கோடிகளை வாரி இறைத்துள்ளதாம் படக்குழு. அதன்படி இப்படத்தில் இடம்பெறும் 5 பாடல் காட்சிகளை படமாக்க மட்டும் ரூ.96 கோடியை செல்வழித்துள்ளார்களாம். இதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர். அதேபோல் ஒரு சண்டைக் காட்சிக்கு மட்டும் ரூ.70 கோடி செல்வானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதையும் படியுங்கள்... ரெடியானது சங்கரின் அடுத்த படைப்பு; ராம் சரணின் கேம் சேஞ்சர் - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Latest Videos

click me!