Published : Dec 24, 2024, 12:55 PM ISTUpdated : Dec 24, 2024, 01:04 PM IST
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பிக்பாஸ் சீசன் 8' நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், அன்ஷிதா மற்றும் ராயன் பேசிக்கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும், 'குக் வித் கோமாளி' மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வாரத்தில் ஐந்து நாட்கள், பிக்பாஸ் நிகழ்ச்சியை மிஸ் பண்ணும் ரசிகர்கள் கூட, போட்டியாளர்கள் செய்த தவறை சுட்டிக்காட்டி.. அவர்களை வறுத்தெடுக்க தொகுப்பாளர் வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் மிஸ் பண்ண தவறுவது இல்லை. எனவே டிஆர்பி-யும் எகிறிவிடும்.
25
Kamalhaasan and Vijay sethupathi
கடந்த ஏழு சீசன்களாக, பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸை ஃப்ரை செய்து வந்த கமலஹாசன், எட்டாவது சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது அவருக்கு பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
எந்த விதத்திலும் கமல்ஹாசனை காப்பி செய்யாத விதத்தில், விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது தனி சிறப்பு எனலாம். அதேபோல் தனக்கே உரிய பாணியில் போட்டியாளர்களை விசாரிக்கிறார். இவர் போட்டியாளர்களிடம் கேட்கும் கேள்விகள், ரசிகர்கள் தரப்பில் கேட்க வேண்டும் என நினைக்கும் கேள்விகளாக உள்ளதால், விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருவதற்கு தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகி உள்ளது.
அதே நேரம் போட்டியாளர்கள் தங்கள் பக்கம் உள்ள நியாயத்தை வெளிப்படுத்த விஜய் சேதுபதி... இடம் கொடுப்பதில்லை, மற்றும் அனுமதிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டும் இவர் மேல் வைக்கப்படுகிறது. ஆனால் இது போன்ற விமர்சனங்களை தாண்டி, விஜய் சேதுபதி ஒரு சிறந்த தொகுப்பாளர் என்பதை பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.
ஆரம்பத்தில் கமல்ஹாசன் அளவுக்கு விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா? என பிக் பாஸ் ரசிகர்கள் சந்தேகித்த நிலையில் அவர்களிடமே இப்போது சிறந்த தொகுப்பாளர் என பாராட்டுகளை பெற்று வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 75 நாட்களை கடந்துள்ள நிலையில், இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. கடந்து வாரம் நடிகர் ரஞ்சித், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் அடுத்தடுத்த வாரங்களில் யார் வெளியேறுவார்கள்? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
45
Anshitha Anji
அதேபோல் இந்த முறை பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் என்று இப்போது யூகித்து சில ரசிகர்கள் கூறவும் துவங்கிவிட்டனர். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், அவ்வப்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் காமெடியாக பேசிக்கொள்ளும் விஷயங்கள் கூட அதிகம் கவனம் பெற்றதாக மாறிவிடுகிறது. அப்படி தான் அன்ஷிதா மற்றும் ரயான் பேசிக்கொண்ட விஷயம் கவனம் பெற்றுள்ளது.
அன்ஷிதா தனக்கு சாப்பிட ஏதாவது வேண்டும் என வயிற்றை காட்டி ரயானிடம் கேட்டதற்கு, அவர் கிண்டலாக வயிற்றில் என்ன பாப்பா இருக்கிறதா என கேட்கிறார். அதற்கு அன்ஷிதாவும் ஆமாம் மூன்று மாதம் என கூற, பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து தானா என கேட்கிறார். பின்னர் நான்கு மாத பேபி எனக் அன்ஷிதா கிண்டலாக கூறுகிறார். அந்த காமெடியாக கூறப்பட்டது என்றாலும், இதுகுறித்த வீடியோவை வெளியிட்டு... அன்ஷிதா கர்ப்பமா? என்ன நடக்குது பிக்பாஸ் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.