தளபதி 69 : புத்தாண்டுக்கு புது அப்டேட் உடன் வருகிறார் விஜய்!

First Published | Dec 24, 2024, 2:37 PM IST

Thalapathy 69 Update : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 69 படத்தின் மாஸ் ஆன அப்டேட் வருகிற புத்தாண்டன்று வெளிவர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thalapathy 69

கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக திகழ்ந்து வருபவர் விஜய். இவர் நடிக்கும் படங்கள் சுமாராக இருந்தாலும் சரி... சூப்பராக இருந்தாலும் சரி அது நிச்சயம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்துவிடும். அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களின் தங்க மகனாக இருக்கிறார் விஜய். இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்து, இந்த வருடத்தின் அதிக வசூல் ஈட்டிய தமிழ் படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது.

H Vinoth, Vijay

கோட் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் நடிப்பில் தளபதி 69 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் பிரியாமணி, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், வரலட்சுமி சரத்குமார், கெளதம் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இதையும் படியுங்கள்... கோலிவுட்டின் 1000 கோடி வசூல் கனவை நனவாக்குமா 2025? தமிழ் படங்களின் லைன் அப் இதோ

Tap to resize

Pooja Hegde, VIjay

தளபதி 69 படத்திற்காக நடிகர் விஜய் ரூ.275 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார். தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இவ்வளவு பெரிய தொகையை எந்த நடிகரும் சம்பளமாக வாங்கியதில்லை. தளபதி 69 படம் தான் நடிகர் விஜய்யின் கடைசி படம் என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்திற்கு பின்னர் சினிமாவை விட்டு விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார் விஜய். இதை அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்.

Thalapathy 69 Update on The Way

தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், தளபதி 69 படம் குறித்த ஒரு தரமான அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி தளபதி 69 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாம். அதன்படி வருகிற ஜனவரி 1ந் தேதி புத்தாண்டன்று தளபதி 69 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் படத்தின் தலைப்பும் வெளிவர வாய்ப்பு உள்ளது.

இதையும் படியுங்கள்... தேசிய விருது யாருக்கு? 2024-ல் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய 4 நடிகர்கள்!

Latest Videos

click me!