Published : Dec 24, 2024, 05:03 PM ISTUpdated : Dec 24, 2024, 05:08 PM IST
பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது நடந்து வரும் ஃபிரீஸ் டாக்கில் விஜே விஷாலின் குடும்பத்தினர் வந்துள்ளனர். இது குறித்த புரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும், பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் ஆறாம் தேதி துவங்கியது. தற்போது விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும், பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் முதல் நாளே மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக நுழைந்தனர். இவர்களை தவிர வைல்டு கார்டு சுற்று மூலம் 6 போட்டியாளர்கள் களம் இறங்கினர். எனவே இந்த முறை மொத்தம் 24 போட்டியாளர்கள், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
25
Eliminated in Bigg Boss
இவர்களில் இருந்து இதுவரை ரவீந்தர் சந்திரசேகர், தர்ஷா குப்தா, சாச்சனா, சத்யா, சுனிதா, ஆர் ஜே ஆனந்தி, ரஞ்சித், தர்ஷிகா, அர்னவ், ரியா தியாகராஜன், வர்ஷினி வெங்கட், சிவக்குமார், என 12 பேர் வெளியேறி உள்ளனர்.
இவர்களை தவிர்த்து தற்போது மீதமுள்ள 12 போட்டியாளர்கள் பிக் பாஸில் தங்களுடைய விளையாட்டை தொடர்ந்து விளையாடி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்போது 79 நாட்களை எட்டி உள்ள நிலையில், மீதம் 21 நாள் மட்டுமே எஞ்சி உள்ளது. பிக் பாஸ் ரசிகர்களின் எமோஷனை தட்டி எழுப்பும் விதமாக, ப்ரீ ஸ்டாஸ்க் தற்போது ஒளிபரப்பாக துவங்கி உள்ளது. அதன்படி இன்றைய தினம், நடிகர் மற்றும் தொகுப்பாளர் தீபக்கின் குடும்பம் முதலாவதாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த நிலையில், இவர்களைத் தொடர்ந்து மஞ்சரியின் குடும்பத்தினர் வந்தனர்.
45
VJ Vishal Family Entry
தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது ப்ரோமோவில், பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் மற்றும் வி ஜே விஷாலின் பெற்றோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். தன்னுடைய அம்மாவை பார்த்தவுடனே ஓடி வந்து கட்டி அணைத்து கொண்ட விஷால், தன்னுடைய தந்தை வரவில்லையா என கேட்க, அதற்க்கு அவரின் அம்மா, நீ அவரிடம் பேசவில்லை அதனால் அவர் வரவில்லை என்று கூறியதும் மனம் உடைந்து போகிறார்.
திடீர் என விஷால் எதிர்பாராத நேரத்தில் உள்ளே வந்த தந்தையை பார்த்ததும், உடைந்து அழுது தன் அன்பை வெளிப்படுத்தினார். இதை தொடர்ந்து விஷாலின் தந்தை பேசும் போது, எனக்கு அவன் மட்டும் தான் இருக்கான். நான் தப்பு பண்ணி இருக்கேன் அதற்காக பிக்பாஸில் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என பேசியுள்ளார். விஷாலின் பெற்றோர் வருகை மிகவும் செண்டிமெண்ட் டச்சுடன் இருந்ததாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.