Nayanthara
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கு கடந்த 2022ம் ஆண்டு திருமணம் ஆனது. தன் நீண்ட நாள் காதலனான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார் நயன். திருமணம் முடிந்த கையோடு, நான்கே மாதங்களில் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார் நயன்தாரா. அந்த குழந்தைகளுக்கு உயிர், உலக் என பெயரிட்டுள்ளார்.
Nayanthara Latest Photos
குழந்தைகள் பிறந்த பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அவர் கைவசம் தற்போது மண்ணாங்கட்டி, ராக்காயி, டாக்ஸிக், டியர் ஸ்டூடண்ட்ஸ், டெஸ்ட் ஆகிய திரைப்படங்கள் உள்ளன. இதில் மண்ணாங்கட்டி, ராக்காயி ஆகிய படங்களில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் நயன்தாரா.
Nayanthara Son
அதேபோல் டியர் ஸ்டூடண்ட்ஸ் மலையாள படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்கும் அவர், டாக்ஸிக் என்கிற பான் இந்தியா படத்தில் ராக்கிங் ஸ்டார் யஷ்ஷுக்கு அக்காவாக நடிக்கிறார். மேலும் மாதவனுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள டெஸ்ட் திரைப்படத்தை சசிகாந்த் இயக்கி உள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்.... விஜய் சேதுபதி உடன் 4வது முறையாக ஜோடி சேரும் நயன்தாரா! இயக்கபோவது யார் தெரியுமா?
Nayanthara visit Paris
ஹீரோயினாக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் செம பிசியாக பணியாற்றி வரும் நயன்தாரா, தற்போது தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் இயக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார்.
Nayanthara Family
இதுதவிர நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் மற்றொரு படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார். இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை தயாரிப்பது மட்டுமின்றி அதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும் நடிக்க உள்ளார் நயன்தாரா.
Nayanthara, Vignesh Shivan
சினிமாவில் இவ்வளவு பிசியாக இருந்தாலும் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளார் நயன்தாரா. அந்த வகையில் அண்மையில் பாரிஸ் நாட்டிற்கு தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர், உலக் உடன் சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் நயன்.