MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய் சேதுபதி உடன் 4வது முறையாக ஜோடி சேரும் நயன்தாரா! இயக்கபோவது யார் தெரியுமா?

விஜய் சேதுபதி உடன் 4வது முறையாக ஜோடி சேரும் நயன்தாரா! இயக்கபோவது யார் தெரியுமா?

Vijay Sethupathi Next Movie : மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் 4வது முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கும் படத்தின் அப்டேட் கசிந்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 24 2024, 09:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vijay Sethupathi

Vijay Sethupathi

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது டிரெயின் திரைப்படம் தயாராகி வருகிறது. மிஷ்கின் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படத்திற்கு பின்னர் அவர் 96 படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார். இதோடு அவர் நடித்த ஏஸ் என்கிற திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில், அவர் கைவசம் உள்ள மற்றொரு படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

24
Director Hari

Director Hari

அதன்படி அவர் இயக்குனர் ஹரி உடன் முதன்முறையாக கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் சிங்கம், ஆறு, சாமி, வேல் என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ள ஹரி, கடைசியாக விஷால் நடித்த ரத்னம் படத்தை இயக்கினார். இந்தப் படம் தோல்வியை சந்தித்ததை அடுத்து, கம்பேக் கொடுக்கும் முனைப்போடு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடன் முதன்முறையாக கூட்டணி அமைத்திருக்கிறார் ஹரி.

இதையும் படியுங்கள்... தேசிய விருது யாருக்கு? 2024-ல் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய 4 நடிகர்கள்!

34
Nayanthara

Nayanthara

இதில் மற்றுமொரு சர்ப்ரைஸ் என்னவென்றால் இப்படத்தை நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதோடு, இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகை நயன்தாராவை தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தியதே இயக்குனர் ஹரி தான். அவர் இயக்கிய ஐயா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நயன், அப்படத்திற்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது 20 ஆண்டுகளுக்கு பின் அவருடன் மீண்டும் இணைந்திருக்கிறார்.

44
Nayanthara, Vijay Sethupathi

Nayanthara, Vijay Sethupathi

அதேபோல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் நான்காவது படம் இதுவாகும். இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் நானும் ரெளடி தான், இமைக்கா நொடிகள் மற்றும் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய திரைப்படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த நிலையில், தற்போது ஹரி இயக்கும் படத்தின் மூலம் நான்காவது முறையாக கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இது குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... 2024-ல் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? தமிழ்நாட்டில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்கள் லிஸ்ட் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா
விஜய் சேதுபதி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தங்கமயில் இருக்கும் நேரம் பார்த்து அஞ்சலியோடு கோவிலுக்கு வந்த சரவணன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image2
திரிஷா ரசிகர்களுக்கு காத்திருக்கும் செமத்தியான ட்ரீட்! சர்ச்சைகளை தாண்டி சாதிக்கும் 'எவர் கிரீன்' நாயகி! என்ன சேதி தெரியுமா?
Recommended image3
சமையல் செய்து சினிமா கத்துக்கிட்ட கரகாட்டகாரன் பட இயக்குனர்.! அஜித் பிரியாணியை ஓரங்கட்டும் கங்கை அமரன் "டிஷ்" எது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved