2024-ல் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? தமிழ்நாட்டில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்கள் லிஸ்ட் இதோ
Top 10 Movies : 2024-ம் ஆண்டு தமிழ்நாட்டில் சக்கைப்போடு போட்டு வசூலை அள்ளிய டாப் 10 படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
Top 10 movies in Tamilnadu
தமிழ்நாட்டில் தமிழ் படங்கள் தான் சக்கைப்போடு போடும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பான் இந்தியா படங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளதால், இந்த ஆண்டு பிற மொழி படங்களும் தமிழ்நாட்டில் அதிக வசூலை வாரிக்குவித்து தங்கள் பலத்தை காட்டி இருக்கின்றன. அந்த வகையில் 2024-ம் ஆண்டு தமிழ்நாட்டில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்களின் பட்டியலை சினிடிராக் தளம் வெளியிட்டுள்ளது. அதன் பட்டியலை பார்க்கலாம்.
Maharaja
10. மகாராஜா
தமிழ்நாட்டில் அதிக வசூல் அள்ளிய படங்களின் பட்டியலில் நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா 10வது இடத்தில் உள்ளது. இப்படத்தை நித்திலன் இயக்கி இருந்தார். இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.48.5 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது. இப்படம் உலகளவில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்தது.
Indian 2
9. இந்தியன் 2
ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன படம் இந்தியன் 2. கடந்த ஜூலை மாதம் திரைக்கு வந்த இப்படம் மிகப்பெரிய அளவில் பிளாப் ஆனது. தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் இப்படம் வெறும் ரூ.54.5 கோடி மட்டுமே வசூலித்து 9-வது இடத்தை பிடித்திருக்கிறது.
Ayalaan
8. அயலான்
சிவகார்த்திகேயன் நடித்த சயின்ஸ் பிக்சன் திரைப்படமான அயலான், பல வருட காத்திருப்புக்கு பின்னர் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆனது. இப்படம் பெரியளவில் வெற்றியடையாவிட்டாலும் குழந்தைகளை கவரும் படமாக இருந்தது. இதனால் 56 கோடி வசூலுடன் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸீல் 8ம் இடத்தை பிடித்துள்ளது.
Manjummel Boys
7. மஞ்சும்மல் பாய்ஸ்
பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தமிழ் படங்கள் பெரியளவில் எடுபடாததால், அந்த சமயத்தில் திரையரங்க உரிமையாளர்களுக்கு வரப்பிரசாதமாக கேரளாவில் இருந்து வந்த படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். இப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் மட்டும் ரூ.63.5 கோடி வசூலித்து இந்த பட்டியலில் 7ம் இடத்தில் உள்ளது.
Aranmanai 4
6. அரண்மனை 4
சுந்தர் சி இயக்கி ஹீரோவாக நடித்த படம் அரண்மனை 4. இப்படத்தில் கதையின் நாயகியாக தமன்னா நடித்திருந்தார். மேலும் ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.67 கோடி வசூலித்து 6ம் இடத்தில் இருக்கிறது.
இதையும் படியுங்கள்... சினிமாவே வேண்டாம்: மகள்களை டாக்டராக்கி அழகு பார்த்த நடிகை சரண்யா பொன்வண்ணன்!
Pushpa 2
5. புஷ்பா 2
தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் லேட்டஸ்டாக இணைந்து சக்கைப்போடு போட்டு வரும் படம் புஷ்பா 2. அல்லு அர்ஜுன் நடித்த இப்படம் பான் இந்தியா அளவில் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றதோடு உலகளவில் ரூ.1500 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்துள்ளது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.70.5 கோடி வசூலித்து 5ம் இடத்தில் உள்ளது.
Raayan
4. ராயன்
தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்த ராயன் திரைப்படம் கடந்த ஜூலை மாதம் திரைக்கு வந்தது. இப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸீல் ரூ.80.25 கோடி வசூலை வாரிக்குவித்து டாப் 10 பட்டியலில் 4-ம் இடத்தை பிடித்திருக்கிறது.
Vettaiyan
3. வேட்டையன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் ஆயுத பூஜை விடுமுறைக்கு வெளியாகி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்ட வேட்டையன் திரைப்படம் இந்த பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது. த.செ.ஞானவேல் இயக்கிய இப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.95.5 கோடி வசூலித்து இருக்கிறது.
Amaran Movie
2. அமரன்
வழக்கமாக ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் தான் டாப் 3ல் இருக்கும். ஆனால் இந்த முறை பாக்ஸ் ஆபிஸ் கிங் போட்டிக்கு புதிதாக எண்ட்ரி கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். கமல்ஹாசன் தயாரிப்பில் அவர் நடித்த அமரன் திரைப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.161 கோடி வசூலித்துள்ளது.
The GOAT
1. தி கோட்
தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் என்று கேட்டால் அனைவரும் விஜய்யை தான் சொல்வார்கள். அதை நிரூபிக்கும் விதமாக இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.219 கோடி வசூலித்து நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.
இதையும் படியுங்கள்... விடுதலை 2 படத்தை காலி பண்ண டிசம்பர் 27ந் தேதி போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் 12 படங்கள்