VJ Vishal - Tharshika
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை மட்டுமின்றி காதலுக்கும் முக்கிய இடமுண்டு. அங்கு உருவான காதல் ஜோடிகள் ஏராளம். ஆனால் அதில் ஒரு சிலரே பிரியாமல் உள்ளனர். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் உருவான காதல் ஜோடி தான் விஷால் - தர்ஷிகா. இந்த சீசனில் ஸ்கூல் டாஸ்க் ஒன்று நடைபெற்றது. அப்போது கண்டெண்ட்டுக்காக இருவரும் காதலர்களாக நடித்தனர். அப்போது விஷால் மீது உண்மையிலேயே ஈர்ப்பு ஏற்பட்டு அவரை காதலிக்க தொடங்கினார் தர்ஷிகா.
Bigg Boss Tharshika
இந்த சீசனின் ஆரம்ப கட்டத்தில் தர்ஷிகா ஒரு ஸ்ட்ராங் ஆன போட்டியாளராக இருந்தார். இவர் பைனலுக்குள் நிச்சயம் செல்வார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போகப்போக விஷால் மீது காதல் ஏற்பட்ட உடன் தர்ஷிகாவின் ஆட்டம் அப்படியே ஆஃப் ஆனது. அவர் விஷாலை காதலிப்பதை தவிர என்ன செய்கிறார் என்கிற கேள்வி உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கே எழுந்தது. ஆனால் தர்ஷிகாவுக்கு காதல் கண்ணை மறைத்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
இதையும் படியுங்கள்... கண்ணீரில் மூழ்கிய விஜே விஷால்! பிக்பாஸ் வீட்டிற்கு வந்து மன்னிப்பு கேட்ட தந்தை!
Vishal Tharshika Love
காதலால் கேமின் மீது இருந்த கவனம் சிதறி, 10வது வாரத்திலேயே எலிமினேட் ஆனார் தர்ஷிகா. இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனுபவம் பற்றி பேட்டி ஒன்றில் பேசி உள்ள தர்ஷிகா, தான் விஷாலை உண்மையாகவே காதலித்ததாக கூறினார். மேலும் தன்னைப்பற்றி மற்றொரு நபருடன் பேசும்போது என்னை மொக்கை மூஞ்சு என சொல்லியுள்ள விஷால், என்னிடம் வந்து நீ அழகா இருக்கன்னு பலமுறை சொல்லி இருக்கிறான். இதில் எது உண்மையான விஷால் என்று எனக்கு சுத்தமாக புரியவில்லை.
Tharshika says about Vishal
அம்மாவுக்காக நான் இந்த கேமை சீரியஸா விளையாடி இருக்கனும்னு தோணுது. என்னை பொறுத்தவரை இந்த சீசனில் தீபக் அல்லது முத்துக்குமரன் தான் டைட்டில் ஜெயிப்பார்கள் என தோன்றுகிறது. அதேபோல் ஜாக்குலின், செளந்தர்யா, மஞ்சரி ஆகியோர் டாப் 5 போட்டியாளர்களாக இருப்பார்கள் எனவும் தர்ஷிகா கூறி இருக்கிறார். அவரின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள், இப்போ புரிஞ்சு என்ன பிரயோஜனம், பிக் பாஸுக்குள் இருக்கும்போதே புரிந்திருந்தால் ஜெயித்திருக்கலாம் என கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... தீபக் குடும்பத்தை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தது யார் தெரியுமா? பாச மழையில் நனைந்து போட்டியாளர்!