இப்படி சினிமாவில் பிசியாக இருக்கும் திரிஷாவுக்கு நாய்கள் என்றால் அலாதி பிரியம். இதனால் தன் வீட்டில் ஏராளமான நாய்களை வளர்த்து வருகிறார் திரிஷா. அதில் அவரின் பேவரைட் நாயின் பெயர் ஜாரோ. இந்த நாயை கடந்த 2012-ம் ஆண்டு முதல் வளர்த்து வருகிறார் திரிஷா. அதை நாய் என்று சொல்ல விரும்பாத திரிஷா, ஜாரோவை தன் மகனாகவே வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை நடிகை திரிஷாவின் செல்ல நாய் ஜாரோ திடீரென உயிரிழந்துள்ளது.