
இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் கமல்ஹாசனும் ஒருவர். நடிகர் என்பதை தாண்டி நடன ஆசிரியர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முக திறமை கொண்ட நடிகராக திகழ்கிறார்.1960 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.
இந்திய சினிமாவின் ராபர்ட் டி நீரோ என்று அழைக்கப்படும் கமல் 4 முறை தேசிய விருது பெற்றுள்ளார். மேலும் பல்வேறு உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார். ஆஸ்கர் விருதுக்கு அதிக படங்களை அனுப்பிய ஒரே நடிகர் என்ற பெருமையை கமல்ஹாசன் பெற்றுள்ளார்.
60 ஆண்டுகளுக்கும் மேலாக திரை வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தி வரும் கமல்ஹாசன் தற்போது இளம் நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பிசியான நடிகராகவும் வலம் வருகிறார்.
திரை வாழ்க்கையில் வெற்றிகரமான நடிகராக வலம் வந்தாலும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போதும் சர்ச்சைகள் நிறைந்ததாகவே உள்ளது. 1978-ஆம் ஆண்டு நடிகையும், கிளாசிக்கல் டான்சருமான வாணி கணபதியை கமல்ஹாசன் திருமணம் செய்து கொண்டார். எனினும் வாணியிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கு முன்பே கமல் சரிகாவுடன் டேட்டிங் செய்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின. எனினும். 1988 ஆம் ஆண்டில், கமலும் வாணியும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
வாணி கணபதியுடனான விவாகரத்துக்குப் பிறகு திருமணத்தில் நம்பிக்கை இழந்ததாக கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அப்போது பேசிய அவர் “ எனக்கு அந்த திருமணத்தில் மகிழ்ச்சி கிடைக்கவில்லை. குறைந்தபட்சம் எனக்கு கொஞ்சம் கூட மகிழ்ச்சி அளிக்கவில்லை. நான் பொய் சொல்ல மாட்டேன்.
அது மிகவும் கொடுமையானது. எனவே நான் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினேன். அந்த நேரத்தில் நான் திருமணம் என்ற அமைப்பின் மீது நம்பிக்கை இழந்து கொண்டிருந்தேன். நான் எப்பொழுதும் சத்தமாகப் பேசினேன்,. எனக்கு திருமணம் ஆன முதல் நாளே அது செட்டாகவில்லை என்று கூறினேன்” என்று தெரிவித்தர்.
கமல் வாணியை திருமணம் செய்துகொண்ட போதே சரிகாவுடன் டேட்டிங் செய்ய ஆரம்பித்ததாகவும், இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 1988-ம் ஆண்டு கமல் சரிகாவை மணந்தார். இந்த தம்பதிக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என்ற 2 மகள்கள் உள்ளனர். இருப்பினும், சரிகாவுடனான கமல்ஹாசனுக்கு நீடிக்கவில்லை. இந்த ஜோடி 2004 இல் விவாகரத்து செய்தது.
வாணி கணபதியிடமிருந்து விவாகரத்து பெற்ற பின்னர், அமைதியாக இருந்த கமல்ஹாசன் 2015 இல், ஒரு நேர்காணலில், வாணியுடனான என்ன விவாகரத்து என்னை கிட்டத்தட்ட திவாலாக்கும் விளிம்பில் கொண்டு சென்றது என்று தெரிவித்தார்.
பின்னர் இதுகுறித்து பேசிய வாணி கணபதி “ நாங்கள் விவாகரத்து பெற்று 28 ஆண்டுகள் ஆகிறது.. நான் இதுபற்றி எப்போதும் பெசுவதில்லை., ஏனென்றால் இது மிகவும் தனிப்பட்ட விஷயம்… ஆனால் நாங்கள் இருவரும் இப்போது பிரிந்துவிட்டோம். ஆனால். அவர் ஏன் வெறி பிடித்த மனிதனைப் போல நடந்து கொள்கிறார்?
எங்கள் பகிரப்பட்ட குடியிருப்பில் இருந்து பயன்படுத்திய உபகரணங்களை எனக்குக் கொடுக்க அவர் மறுத்துவிட்டார். அத்தகைய மனிதனிடம் நான் என்ன எதிர்பார்க்க முடியும்? உலகில் எந்த நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் ஒருவரை திவாலாக்கும் நிலைக்குத் தள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது? அதைப் படித்ததும் நான் முற்றிலும் அதிர்ச்சியடைந்தேன். நான் திருமணத்திலிருந்து வெளியேறியபோது அவருடைய ஈகோ காயப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அதற்குப் பிறகு இவ்வளவு நடந்திருக்கிறது.” என்று தெரிவித்தார்.