Yashika: பிளாஸ்டிக் சர்ஜரி சர்ச்சையில் சிக்கிய யாஷிகா? ரசிகர்கள் விமர்சனத்துக்கு நெத்தியடி பதில்!

First Published Apr 22, 2024, 8:56 PM IST

நடிகை யாஷிகா பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக பல ரசிகர்கள் விமர்சனம் செய்த நிலையில்... இதற்க்கு உண்மையை உடைத்து நெத்தியடி பதில் கூறியுள்ளார்.
 

Yashika

13 வயதிலேயே தமிழ் சினிமாவில் களமிறங்கி, வாய்ப்பு தேட துவங்கியவர் யாஷிகா. ஆரம்பத்தில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், இதை தொடர்ந்து துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், கழுகு 2, ஜாம்பி, மூக்குத்தி அம்மன், தி லெஜண்ட் போன்ற படங்களில் தன்னுடைய கவர்ச்சிகரமான நடிப்பால் பட்டையை கிளப்பினார்.
 

'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் நடித்த பின்னர், இவர் மீது அடல்ட் பட நாயகி என இவருக்கு ரசிகர்கள் முத்திரை குத்திய நிலையில், இதில் இருந்து வெளியே வருவதாகவும்.. பட வாய்ப்புக்காகவும், பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி மிகவும் சாமர்த்தியமாக விளையாடினார். எனினும் இவர் ஐஸ்வர்யா தாத்தாவும் ஓவராக ஜால்ரா போட்டதால்... கடைசி சில வாரங்களுக்கு முன் வெளியே செல்ல நேர்ந்தது.

Coolie: சரத்குமார் பட தலைப்பில் ரஜினி! இது LCU படமா? டைட்டில் டீச்சரின் இந்த விஷயங்களை கவனிசீங்களா?

Yashika Aannand

பட வாய்ப்புகளை கைப்பற்றி பிசியாக நடித்து வந்த போது தான், தன்னுடைய தோழி மற்றும் ஆண் நண்பர்களுடன் பார்ட்டி பண்ண புதுச்சேரிக்கு வந்துவிட்டு, சென்னைக்கு சென்று கொண்டிருந்தபோது, யாஷிகா சென்ற கார் மகாபலிபுரம் அருகே விபத்தில் சிக்கியது. இதில் யாஷிகாவுடன் வந்த தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா மற்றும் அவரின் நண்பர்கள் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.
 

Actress Yashika Aannand

அந்த விபத்தின் தாக்கத்தில் இருந்து யாஷிகா மீண்டு, மீண்டும் தன்னுடைய பாணியில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு, வாய்ப்பு தேடிவரும் நிலையில்... யாஷிகா தன்னுடைய அழகை மேன்படுத்திக்கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக சில ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வந்த நிலையில், இதற்கு பதிலளித்துள்ள யாஷிகா... பிளாஸ்டிக் சர்ஜரி எதுவும் செய்யவில்லை என நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்.

Durai: தேசிய விருது இயக்குனர் துரை யார் தெரியுமா? இந்த சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இவரா.. அரிய தகவல்கள்!

click me!