ஜப்பானில் மின்னல் வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்..ஆனால் பயணிகள் பயணிக்க அனுமதி இல்லை..ஏன் தெரியுமா?

By Kalai Selvi  |  First Published May 16, 2024, 7:13 PM IST

ஜப்பான் புல்லட் ரயில்களுக்கு பிரபலம். இதனால் உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் புல்லர் ரயிலில் பயணம் செய்ய வருகிறார்கள். ஆனால், இங்கு ஒரு புல்லட் ரயிலில் மட்டும் பயணிகள் யாரும் பயணிக்க அனுமதியில்லை. அது ஏன் தெரியுமா..!


ஜப்பானின் புல்லட் ரயில்கள் உலகம் முழுவதும் பிரபலமானது என்றே சொல்லலாம். காரணம், இங்கு இருக்கும் புல்லட் ரயிலில் பயணம் செய்வது ஒரு வித்தியாசமான உணர்வை கொடுப்பதாக அனுபவமானவர்கள சொல்லுகிறார்கள். இதனால் தான் உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் ஜப்பானின் புல்லட் ரயிலில் பயணம் செய்ய வருகின்றனர். இருப்பினும், ஜப்பானில் ஒரு புல்லட் ரயில் உள்ளது. அதில் பயணிகள் யாரும் பயணிக்க முடியாது தெரியுமா..?

உலகப் புகழ்பெற்ற ஜப்பான் புல்லட் ரயில்கள்:
ஜப்பான், புல்லட் ரயில்களுக்கு பிரபலம்.. இங்கு இருக்கும் புல்லட் ரயில்கள் அனைத்தும் பாதுகாப்பு, பயணத்தின் போது ஸ்திரத்தன்மை மற்றும் சரியான நேரத்தில் கொண்டு சேர்ப்பது போன்றவற்றிற்கு பெயர் பெற்றதாகும். அதுமட்டுமின்றி, ஜப்பானில் தினமும் 300 க்கும் மேற்பட்ட புல்லட் ரயில்கள் இயக்கப்படுகின்றது மற்றும் அதில் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். ஆனால், ஒரு பயணி கூட செல்லாத புல்லட் ரயில் ஒன்று இங்கு உள்ளது. கேட்ட ஆச்சரியமாக இருக்கா..? ஆனால் அதுதான் உண்மை. அந்த புல்லட் ரயிலின் பெயர், "டாக்டர் மஞ்சள்" ஆகும்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க:  ஜப்பானில் இருந்து இந்தியா வரும் 24 புல்லட் ரயில்கள்! மும்மை டூ அகமதாபாத் செல்ல 2 மணிநேரம் மட்டுமே!

டாக்டர் மஞ்சள் என்றால் என்ன? 
ஜப்பானில் உள்ள பெரும்பாலான ரயில்கள் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆனால், முற்றிலும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் ரயில் ஒன்றுதான் உள்ளது. அதுதான் டாக்டர் மஞ்சள் புல்லட் ரயில். ஆனால், இந்த ரயிலில் பயணிக்க அனுமதி இல்லை. ஆனால், இந்த ரயில் மக்களின் பாதுகாப்பிற்காக மட்டுமே தான் இயக்கப்படுகிறது. எப்படியெனில், இந்த ரயில் மூலம், ரயில் பாதையின் நிலை, எழுச்சி மற்றும் இடையூறுகள் கண்டறியப்படுகின்றன. அதனால் தான் இந்த புல்லட் ரயிலுக்கு 'டாக்டர் மஞ்சள்' என்று பெயர்.

இதையும் படிங்க: 1999க்கு பிறகு இதுதான்! 25 ஆண்டுகளுக்கு பின் மோசமான நிகழ்வு.. ஷாக்கில் ஜப்பான், தைவான், பிலிப்பைன்ஸ் மக்கள்!

டாக்டர் மஞ்சள் ரயில் பயன்பாடு:
'டாக்டர் மஞ்சள்' ரயில் தண்டவாளங்களை ஆய்வு செய்யவும், கம்பிகள், சிக்னல்கள் போன்றவற்றில் ஏற்படும் பிரச்னைகளை கண்டறிந்து, அதை அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக இந்த ரயிலில் சென்சார்கள் மற்றும் அனைத்து வகையான உபகரணங்களும் பொருத்தப்பட்டுள்ளது. அவை உடனடியாக தவறுகளை கண்டறிந்து சிக்னல்களை விரைவாக அனுப்பிவிடும். பின்னர் பொறியாளர்கள் தவறை சரி செய்கின்றனர். இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 443 கிமீ வேகத்தில் இயங்கும். இதில் 7 பெட்டிகள் மட்டுமே உள்ளதால், இது சாதாரண ரயில்களை விடவும் சின்னதாகும்.

மேலும், இந்த ரயிலில் வழக்கமாக 2 விமானிகள், 3 டிராக் டெக்னீஷியன்கள் மற்றும் 4 தொழிலாளர்கள் உட்பட 9 பணியாளர்களுடன் இயக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, இந்த ரயிலானது தண்டவாளத்தில் ஒரு மருத்துவர் போல, காரணம் இது குறைபாடுகளைக் கண்டறியும். அதனால்தான் இது 'டாக்டர்' என்று அழைக்கப்படுகிறது மற்றும் அதன் மஞ்சள் நிறத்தால், இதற்கு 'டாக்டர் மஞ்சள்' என்று பெயரும் வந்தது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!