பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ஷெபாஸ் ஷெரீஃப் ராஜினாமா!

By Manikanda Prabu  |  First Published May 13, 2024, 5:31 PM IST

பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என் PML-N ) தலைவர் பதவியில் இருந்து அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ராஜினாமா செய்துள்ளார்


பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (பிஎம்எல்-என்) கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறையாக ஷெபாஸ் ஷெரீஃப் பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என் PML-N ) தலைவர் பதவியில் இருந்து அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ராஜினாமா செய்துள்ளார். அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப்பை கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு வலியுறுத்திய நிலையில், தனது தலைவர் பதவியை ஷெபாஸ் ஷெரீஃப் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை நவாஸ் ஷெரீப்புக்கு, ஷெபாஸ் ஷெரீஃப் அனுப்பியுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

ஷெபாஸ் ஷெரீஃப் ராஜினாமா செய்ததையடுத்து, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தை மே 28 ஆம் தேதி லாகூரில் கூட்ட பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி முடிவு செய்துள்ளது.

முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு மாநாட்டில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) தலைவராக ஷெபாஸ் ஷெரீஃப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதே ஆண்டில், வழக்கு ஒன்றில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், நவாஸ் ஷெரீப் எந்தவொரு பதவியையும் வகிக்க தகுதியற்றவரானார். அதன்பின்னர், அக்கட்சியின் மரியாதைக்குரிய குவாட் எனும் பதவி ஒன்று உருவாக்கப்பட்டு, நவாஸ் ஷெரீப் வாழ்நாள் தலைவர் என்று அழைக்கப்பட்டு வந்தார்.

பேரழிவை ஏற்படுத்திய ஹிரோஷிமா, நாகசாமி அணுகுண்டு வீச்சு.. அதிசயமாக உயிர் பிழைத்த நபர்..

இதனிடையே, கடந்த ஆண்டு நவம்பர் 29 மற்றும் டிசம்பர் 12ஆம் தேதிகளில் சில வழக்குகளில் இருந்து நவாஸ் ஷெரீப்பை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் விடுவித்தது. அதன்பின்னர், 2024 பொதுத்தேர்தலில் லாகூரில் போட்டியிட்டு அவர் வெற்றியும் பெற்றார்.

“ஜின்னாவின் அரசியல் வாரிசு என்று அழைக்கப்படக்கூடிய ஒரே பாகிஸ்தானிய அரசியல்வாதி மற்றும் தலைவர் நவாஸ் ஷெரீப் என்று நான் நம்புகிறேன். அவரை போன்ற ஒரு தலைவரை பெற்றதற்கு நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்.” என தனது சகோதரர் குறித்து ஷெபாஸ் ஷெரீப் அண்மையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் நெகிழ்சி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!