'குணா' படத்திற்கு பின் ரோஷ்ணி நடிக்காதது ஏன்? 32 வருடங்களுக்கு பின் இயக்குனர் சந்தானபாரதி வெளியிட்ட தகவல்!

First Published Mar 5, 2024, 2:09 PM IST

உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான 'குணா' படத்தில், கதாநாயகியாக நடித்த ரோஷினி ஏன் இந்த படத்திற்கு பின்னர் நடிக்க வில்லை என்பது குறித்து எழுப்பப்பட்ட  கேள்விக்கு இயக்குனர் சந்தான பாரதி பதிலளித்துள்ளார்.
 

சமீபத்தில் வெளியான 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தின் வெற்றிக்கு பின்னர், 'குணா' படம் குறித்து மீண்டும் ரசிகர்கள் பேச துவங்கியுள்ளனர். சிலர் இந்த நேரத்தில் மீண்டும் 'குணா' படத்தை ரீ-ரிலீஸ் செய்யவேண்டும் என்கிற கோரிக்கைகளையும் வைத்து வருகிறார்கள். 

அதாவது மலையாளத்தில் வெளியான 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் கடந்த 22-ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை இயக்குனர் சிதம்பரம் என்பவர், கடந்த 2006-ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்கி இருந்தார். இந்த படத்தில் ''குணா படத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், 'குணா' படத்தில் காட்டப்பட்ட குகையில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மீண்டும் சென்று இப்படத்தை படமாக்கி இருந்தனர்.

ஆத்தாடி! மகன் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில்.. நிதா அம்பானி அணிந்திருந்த எமரால்டு நெக்லஸ் எவ்வளவு தெரியுமா?

முன்னணி மலையாள நடிகர்களின் வசூலை தட்டி தூக்கியுள்ள இந்த படம் இதுவரை 100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. மலையாளத்தில் மட்டும் இன்றி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதே போல் கடந்த சில தினங்களுக்கு முன் 'மஞ்சுமெல் பாய்ஸ்' படக்குழுவினரை அழைத்து, உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் 'குணா' படத்தின் இயக்குனரான, சந்தானபாரதி பேட்டி ஒன்றில் இப்படத்தின் நாயகி பற்றிய சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். தொகுப்பாளர் 'குணா' படத்தின் நாயகியான ரோஷினி ஏன்? இந்த படத்திற்கு பின்னர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர்... ரோஷினி இந்த படத்தில் நடிக்கும் போதே இதுவே என் கடைசி படம் இனி எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டார்.

Rajinikanth: ஆனந்த் - ராதிகா ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி குறித்து.. ரஜினிகாந்த் கூறியது என்ன தெரியுமா?

ரோஷ்ணி மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். மிகவும் எஜுகேட்டட் ஃபேமிலி. எனவே அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும், பெரிய ஆளாக வர வேண்டும் என்கிற எண்ணம் இல்லை. அவரின் குடும்பத்தினரும் அதை விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். 

click me!