Viruman: விநாயகர் சதுர்த்தி வெளியீடாக கார்த்தியின் விருமன் படம் ...சூப்பர் அப்டேட் கேட்டு குஷியான ரசிகர்கள்..

First Published May 18, 2022, 5:46 PM IST

Viruman release date: கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம், வரும் ஆகஸ்ட் 31ம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. 

Viruman

சுல்தான் படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி, கொம்பன் பட இயக்குநர் முத்தையா இயக்கத்தில், விருமன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில், கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். அவர் இப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

Viruman

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படத்தை, நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனம், கார்த்தியை வைத்து இதற்கு முன் தயாரித்த கடைக்குட்டி சிங்கம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Viruman

இந்தப் படத்தில் கார்த்திதான் விருமன். இந்த படத்தில் தந்தையான பிரகாஷ்ராஜ் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது தந்தையை தட்டி கேட்கும் நபராக கார்த்தி இருக்கிறாராம். மேலும், இந்த படத்தில், விருமனுக்கு துணையாக நல்லது செய்யும் தாய்மாமன் வேடத்தில் ராஜ்கிரண் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

viruman

முழுக்க முழுக்க கிராமத்து கதையம்சம் கொண்ட விருமன் படத்தின் பின்னணி பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.  

viruman

இந்த நிலையில், தற்போது இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி, அதாவது விநாயகர் சதுர்த்திவிடுமுறை நாளில் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால், கார்த்தியின் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் படிக்க....Yashika Aannand: அச்சச்சோ...யாஷிகா ஆனந்திற்கு என்னாச்சு..? கதறி அழும் வீடியோ பார்த்து குழம்பிப்போன ரசிகர்கள்..

click me!