Trisha : பூவுக்கு பிறந்தநாள்.. 40ஐ எட்டிய கோடீஸ்வர கோலிவுட் குயின் த்ரிஷா - சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

First Published May 4, 2024, 8:53 AM IST

Actress Trisha : தமிழ் திரையுலகில் கடந்த 25 ஆண்டுகளாக சிறந்த நடிகையாக பயணித்து வரும் த்ரிஷா, இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடிவருகின்றார். அவரது தீவிர ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொலிந்து வருகின்றனர்.

Trisha krishnan

சென்னையில் பிறந்து, எத்திராஜ் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்து அதன் பிறகு மாடலிங் துறையில் நுழைந்து, பல விளம்பர படங்களில் நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகை திரிஷா. கடந்த 1999 ஆம் ஆண்டு டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் வெளியான "ஜோடி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

STAR : சினிமாவில் எனக்கு மிஞ்சியது தோல்வியே.. ஆனா என் மகன் நிச்சயம் ஜெயிச்சுருவான் - பிரபல நடிகர் உருக்கம்!

Trisha in Saree

அதன் பிறகு கடந்த 2002 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான "மௌனம் பேசியதே" திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின் வெளியான "மனசெல்லாம்", "சாமி", "லேசா லேசா", "அலை" மற்றும் "எனக்கு 20 உனக்கு 18" போன்ற திரைப்படங்கள் திரிஷாவின் புகழை தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரப்பியது.

Trisha photos

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், தல அஜித், விக்ரம், சூர்யா என்று இவர் ஜோடி போட்டு நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மிகச் சிறந்த நடிகையாக கடந்த 25 ஆண்டுகளாக பயணித்து வருகிறார் திரிஷா.

kollywood actress trisha

இவருடைய நடிப்பில் வெளியான "விண்ணைத்தாண்டி வருவாயா" மற்றும் "96" போன்ற திரைப்படங்கள், ஆண்டுகள் பல கடந்தும் இவருடைய நடிப்புக்காக வெகுவாக பாராட்டப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. தமிழ் சினிமாவின் மிக மூத்த நடிகையாக இன்றளவும் அதே புகழோடு வலம் வருகிறார் இவர் என்றால் அது மிகையல்ல.

Actress Trisha Krishnan

சென்னையில் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களாவில் வசிக்கும் நடிகை திரிஷாவிற்கு, ஹைதராபாதிலும் 6 கோடி மதிப்பிலான ஒரு பங்களா உள்ளது. அவரிடம் 80 லட்சம் முதல் 5 கோடி வரையிலான பல சொகுசு கார்கள் உள்ளது. வருடத்திற்கு சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு கடந்த 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் 90 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

சுடருக்கு கண்டிஷன் போட்ட எழில்! மகிழ்ச்சியில் மனோகரி, நடந்தது என்ன? நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

click me!