Salem : ஆத்தூர் பட்டாசு ஆலை.. திடீரென ஏற்பட்ட வெடி விபத்து.. ஒருவர் உடல் சிதறி பலி - முழு விவரம்!

By Ansgar R  |  First Published May 16, 2024, 11:05 PM IST

Salem Fire Crackers Factory : சேலம், ஆத்தூரை அடுத்துள்ள கடம்பூர் மேற்கு காடு என்ற பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூருக்கு அடுத்துள்ள பகுதி தான் கடம்பூர் மேற்கு காடு, இந்த பகுதியில் வசித்து வரும் தனசேகரன் என்பவர் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக தனது சொந்த விவசாய நிலத்தில் "மணி ஃபயர் ஒர்க்ஸ்" என்கின்ற பெயரில் பட்டாசு ஆலை ஒன்றை நடத்தி வருவதாக தற்போது கிடைத்துள்ள தகவல்கள்  தெரிவிக்கின்றது.

இந்த பட்டாசு ஆலையில் சிறிது சிறிதாக நான்கு கட்டிடங்களை கட்டி, அதில் பட்டாசு செய்யும் வேலைகளை அவ்வூர் மக்களை வேலைக்கு அமர்த்தி செய்து வருகிறார் தனசேகரன். இந்நிலையில் பட்டாசுகளை தயாரிப்பதற்காக அந்த ஆலையில் வைக்கப்பட்டிருந்த மூலப் பொருட்களை எடுப்பதற்காக கடம்பூர் மேற்கு காடு பகுதிக்கு அருகில் உள்ள கூலமேடு என்கின்ற கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் இன்று கட்டிடத்திற்குள்ளே சென்றுள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

எல்லை தாண்டி தடை செய்யப்பட்ட கடல் அட்டையை பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது

அப்பொழுது எதிர்பாராத விதமாக அங்கு தீப்பிடித்த நிலையில், குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறி, அந்த கட்டிடமும் தரைமட்டமானது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜமாணிக்கம் உடல் சிதறி உயிரிழந்தார். மேலும் அந்த குடோனுக்குள் அப்பொழுது பணியில் இருந்த இரு பெண்களும் பலத்த காயத்துடன் தற்பொழுது ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தீவிர சிகிச்சையானது அளிக்கப்பட்டு வருகிறது, இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ராஜமாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில் ராஜமாணிக்கத்தின் சொந்தங்கள் வருவதற்கு முன்பாக அவரது உடல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து ஆத்தூர் மற்றும் கடம்பூர் சாலையில் சாலையில் இறந்த ராஜமாணிக்கத்தின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது. சேலம் பகுதியில் பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Coimbatore : கோவை.. இளைஞர்களை குறி வைத்து கஞ்சா & உயர் ரக போதை பொருட்கள் விற்பனை - அதிரடியாக ஐவர் கைது! Video!

click me!