STAR Movie : சினிமாவில் எனக்கு மிஞ்சியது தோல்வியே; ஆனா என் மகன் ஜெயிச்சுருவான் - பிரபல நடிகர் உருக்கம்!

First Published May 4, 2024, 8:21 AM IST

Star Movie : தொடர்ச்சியாக நல்ல பல படங்களை கொடுத்து வரும் பிரபல நடிகர் கவின் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் "ஸ்டார்". இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்குகிறார் இளன்.

Kavin

திருச்சியில் பிறந்து, சின்னத்திரை நாடகங்களில் நடிக்க தொடங்கி, அதன்பிறகு வெள்ளித்திரையில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து, தனது திறமையை நிரூபித்து இன்று "லிப்ட்" மற்றும் "டாடா" போன்ற வெற்றி திரைப்படங்களை கொடுத்து, தனது அடுத்த கட்ட பயணத்தை தொடங்கியுள்ள நடிகர் தான் கவின்.

சுடருக்கு கண்டிஷன் போட்ட எழில்! மகிழ்ச்சியில் மனோகரி, நடந்தது என்ன? நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

Director Ilan

தற்பொழுது நெல்சன் திலீப் குமார் தயாரிப்பில் உருவாக உள்ள "பிளடி பேக்கர்" என்கின்ற திரைப்படத்திலும் கவின் நடிக்க உள்ள நிலையில், அறிமுக இயக்குனர் இளன் இயக்கத்தில் உருவாகியுள்ள "ஸ்டார்" என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் கவின்.

Raja Rani Pandian

இயக்குனர் இளன் வேறு யாருமல்ல ராஜா ராணி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பாண்டியன் தான். அவர் தனது மகன் இளன் குறித்து மனம் திறந்துள்ளார். ஒரு ஸ்டில் போட்டோகிராபராக சினிமாவுலகில் களமிறங்கிய எனக்கு, தொடர்ச்சியாக தோல்விகள் மட்டுமே மிஞ்சியது. இந்த சூழலில் தான் எனது 55 வது வயதில் முதல் முறையாக அட்லீயின் இயக்கத்தில் உருவான ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்தேன்.

Star Movie Director Elan

அதன் பிறகு தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்தாலும் ஒரு நடிகனாக நான் சினிமாவில் தோல்வியையே சந்தித்துள்ளேன். ஆனால் இயக்குனராக தமிழ் திரை உலகில் களமிறங்கும் எனது மகன் இளன் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று ஸ்டார் பட செய்தியாளர் சந்திப்பில் தன் மனம் நெகிழ்ந்து மகன் பற்றி பேசியிருக்கிறார் ராஜா ராணி பாண்டியன்.

மாடர்ன் சேலையில்.. மாலை நேரத்தில் பீச்சில் வாணி போஜன் கொடுத்த ஹாட் லுக்.. வைரல் போட்டோஸ்..

click me!