Savukku Shankar: சவுக்கு சங்கர் கைது; தேனியில் வைத்து தட்டித்தூக்கிய போலீஸ்; என்ன காரணம் தெரியுமா?

By vinoth kumar  |  First Published May 4, 2024, 7:54 AM IST

காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில்  பேசிய விவகாரத்தில் சவுக்கு சங்கர் பேசியிருந்தார். 


பிரபல யூடியூபரான சவுக்கு சங்கரை தேனி வைத்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சவுக்கு சங்கருக்கு என்று ரசிகர் பட்டாளே இருந்து வருகிறது. அரசியல் விமர்சகரான இவர் தொடர்ந்து ஆளுங்கட்சியான திமுக கடுமையாக தாக்கி பேசிவந்தார். கடந்த ஆண்டு நீதிபதியை விமர்சனம் செய்த காரணத்தால் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சுமார் 10 மாதத்திற்கு பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: Power Shutdown in Chennai: அட கடவுளே.. இன்னைக்குனு பார்த்து சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?

Savukku Shankar has been arrested today by Coimbatore city police cyber crime wing for the offences committed under the following sections. 294(b), 509 and 353 IPC r/w section 4 of Tamilnadu prohibition of harassment of Woman Act and section 67 of Iinformation Technology Act,2000

— கோவை மாநகரக் காவல் Coimbatore City Police (@policecbecity)

அப்படி இருந்த போதிலும்  திமுக அரசின் செயல்பாடுகளையும், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை குறிவைத்து சவுக்கு சங்கர் தனது சவுக்கு ஊடகத்தின் மூலம் தினமும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அரசியல் ரீதியாக பேசும் சவுக்கு சங்கர் சில நேரங்களில் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வருகிறார். 

 

இந்நிலையில், காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில்  பேசிய விவகாரத்தில் சவுக்கு சங்கர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கோவை அழைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க:  அதிமுகவுக்கு சுக்கிர யோகம் அடிக்குமா? ஒரே வார்த்தையில் குருபெயர்ச்சி பலன் சொன்ன டிடிவி. தினகரன்!

click me!