ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இன்று நடைமேடை 4ல் தானப்பூரில் இருந்து பெங்களூரு வரை செல்லும் சங்கமித்ரா விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் திடீரென நடைமேடையில் இருந்து இறங்கி நடந்து வந்து சங்கமித்ரா விரைவு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
undefined
மேலும் இதனை தொடர்ந்து ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த நபரின் உடலை மீட்ட ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாட்டு சாணத்தை பொட்டலம் போட்டு கஞ்சா என விற்பனை; முதலீடே இல்லாமல் லட்சாதிபதியாக நினைத்த இளைஞர்கள்
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? எதற்காக தற்கொலை செய்துக்கொண்டார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். மேலும் அந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.