ஆம்பூர் அருகே இசைக்கச்சேரியின் போது ஏற்பட்ட மோதலை தடுக்கச்சென்ற பெண் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் காவல் துறையினருக்கு எதிரான தாக்குதல்களும், போதைப் புழக்கமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனை தடுக்கும் முயற்சியில் அதிகாரிகள் களம் இறங்கினாலும் நாளுக்கு நாள் பிரச்சினை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம்., ஆம்பூர் அடுத்த இராமசந்திராபுரம் பகுதியில் நேற்று எட்டியம்மன் கோவில் திருவிழா நடைப்பெற்றது.
போலீஸ் பாதுகாப்பு பெறுவதற்காக இஸ்லாமியர் மீது பொய் புகார்; இந்து முன்னணி பிரமுகர் கைது
undefined
திருவிழாவினைத் தொடர்ந்து நேற்று இரவு கோவில் வளாகம் அருகே இசைக்கச்சேரியும் நடைப்பெற்றுள்ளது. அப்பொழுது இசைக்கச்சேரியில் இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச்சென்ற உமராபாத் காவல் உதவி ஆய்வாளர் லட்சுமியை அதே பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்ற இளைஞர் தாக்கியுள்ளார்.
ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மீண்டும் சர்க்யூட் பேருந்து; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் லட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் உமராபாத் காவல்துறையினர் கணேஷை கைது செய்து அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் இசைக் கச்சேரியில் ஏற்பட்ட மோதலை தடுக்கச்சென்ற பெண் உதவி ஆய்வாளரை இளைஞர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.