#BREAKING: விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தகுதிநீக்கமா? தேர்தல் ஆணையம் சொன்ன அதிர்ச்சி தகவல்!

First Published Apr 25, 2024, 1:03 PM IST

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பரபரப்பு பதில் அளித்துள்ளது. 

virudhunagar lok sabha constituency

விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மாணிக்கம் தாகூர் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் மீது தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரி மதுரை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சசிகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

Manickam Thakur

அதில், நடாளுமன்ற தேர்தலின் போது, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் முகவர்களும், கூட்டணி கட்சியினரும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தனர். இந்த பணப்பட்டுவாடா தொடர்பாக மாணிக்கம் தாகூரின் முகவர்கள் காமராஜ், சீனி, கருப்பையா, பாண்டி ஆகியோருக்கு எதிராக விருதுநகர், மதுரை காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதும், வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

Chennai High Court

தேர்தல் விதிகளை மீறிய அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையமும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய மனுவின் அடிப்படையில் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

Election Commission

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.  மனுதாரரின் மனு ஏற்கனவே பரிசீலனைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு வாரத்தில் கோரிக்கை மனு மீது முடிவெடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

click me!