Inimel Song : கமல் மகளுடன் கண்டமேனிக்கு ரொமான்ஸ் செய்த லோகேஷ் கனகராஜ்... பங்கமாக கலாய்த்த விக்ரம் பட நடிகை

First Published Mar 22, 2024, 8:36 AM IST

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இனிமேல் எனும் ஆல்பம் பாடலில் கமல் மகள் ஸ்ருதிஹாசன் உடன் ரொமான்ஸ் செய்ததை நடிகை காயத்ரி கலாய்த்துள்ளார்.

Gayathrie Trolls Lokesh Kanagaraj

தமிழ் திரையுலகில் அதிக டிமாண்ட் உள்ள இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான். மாநகரம் படம் மூலம் அறிமுகமான இவர் அடுத்தடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து கோலிவுட்டின் தவிர்க்க முடியாத இயக்குனர் பட்டியலில் இணைந்துவிட்டார். அவர் இயக்கத்தில் அடுத்ததாக தலைவர் 171 படம் உருவாக உள்ளது. ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணியில் பிசியாக உள்ளார் லோகேஷ்.

lokesh kanagaraj, Shruti Haasan

இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் சர்ப்ரைஸாக கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனும், லோகேஷ் கனகராஜும் இணைந்து பணியாற்றி உள்ளதாக குறிப்பிட்டு இருந்தனர். இதைப்பார்த்த ரசிகர்கள் அவர்கள் கூட்டணியில் படம் உருவாக உள்ளதாக எண்ணி வந்தனர். ஆனால் அந்த யூகங்களை எல்லாம் தவிடுபொடி ஆக்கும் வண்ணம் வெளிவந்தது அடுத்த அப்டேட்.

இதையும் படியுங்கள்... Inimel Teaser: ஹீரோவாக மாறி ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ் பண்ணும் லோகேஷ் கனகராஜ்! வெளியான 'இனிமேல்' டீசர்.!

Inimel Song Teaser

அதில் லோகேஷும் ஸ்ருதிஹாசனும் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றில் பணியாற்றி உள்ளதாகவும், இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இதில் லோகேஷ் இயக்குனராக அல்லாமல் ஹீரோவாக களமிறங்கி உள்ளார். இந்த பாடலை கம்போஸ் செய்துள்ள ஸ்ருதிஹாசன் தான் இதில் லோகேஷுக்கு ஜோடியாக நடித்தும் இருக்கிறார். இனிமேல் என தொடங்கும் இப்பாடலின் வரிகளை கமல்ஹாசன் எழுதி உள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் இந்த ஆல்பம் பாடலை தயாரித்து உள்ளது.

lokesh kanagaraj, Gayathrie

இனிமேல் பாடல் வருகிற மார்ச் 25-ந் தேதி ரிலீசாகும் என அறிவித்த கையோடு அப்பாடலின் டீசரை நேற்று வெளியிட்டு இருந்தனர். அந்த டீசர் தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம டிரெண்டிங் ஆக உள்ளது. அதற்கு காரணம் அதில் லோகேஷ் கனகராஜும் ஸ்ருதிஹாசனும் ரொமான்ஸில் பின்னி பெடலெடுத்துள்ளனர். அந்த டீசரை பார்த்த அனைவரும் ஆச்சர்யப்பட்டது லோகேஷா இப்படி ரொமான்ஸ் செய்கிறார் என்பது தான்.

Gayathrie X post

ஏனெனில் அவரது படங்களில் ஹீரோயின்களை கருணையே இல்லாமல் கொலை செய்வதை வழக்கமாக வைத்திருப்பவர் லோகேஷ். அவருக்குள் இப்படி ஒரு ரொமாண்டிக் பக்கம் இருப்பது தான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. லோகேஷின் இந்த ரொமாண்டிக் வெர்ஷனை பார்த்த விக்ரம் பட நடிகை காயத்ரி அவரை பங்கமாக கலாய்த்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், உங்க படத்துல ரொமான்ஸ் பண்ணா தலைய வெட்டிட்டு... லோகேஷ் என்னம்மா இதெல்லாம் என கேட்டுள்ளார். அவரின் இந்த பதிவு செம்ம வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... Seeman Six Pack Photo: வெறித்தனமாக ஒர்க் அவுட்..! சிக்ஸ் பேக் வைத்த சிங்கமாக மாறிய சீமான்! வைரலாகும் போட்டோஸ்!

click me!