இயக்குனராக இருந்து, ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள லோகேஷ் கனகராஜின் 'இனிமேல்' ஆல்பம் பாடலின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.  

உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம், சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் 'இனிமேல்' என்ற தலைப்பில் ஒரு பாடலை அறிவித்தது. 

உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் மகத்தான வெற்றியைப் பெற்ற விக்ரம் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் RKFI இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. போஸ்டரில் குறிப்பிட்டுள்ளபடி லோகேஷ் ஒரு நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 'இனிமேல்' பாடல் நவீன நகர்ப்புற ரிலேஷன்ஷிப்பில், காதலின் அனைத்து நிலைகளையும் அதன் ஏற்ற இறக்கங்களுடன் சித்தரிக்கும் பாடலாகும். ஸ்ருதி ஹாசன் பாடி, இசையமைத்துள்ள இனிமேல் பாடலை, கமல்ஹாசன் எழுதியுள்ளார்.

Actress Radha: நடு ரோட்டில் சரமாரியாக தாக்கிய 'சுந்தரா டிராவல்ஸ்' நடிகை ராதா! போலீசில் பரபரப்பு புகார்!

இப்பாடல் தற்போதைய தலைமுறையில் காதல் இயங்கும் விதத்தைக் கச்சிதமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. எட்ஜ், ஷீ இஸ் எ ஹீரோ மற்றும் மான்ஸ்டர் மெஷின் போன்ற வெற்றிகரமான சுயாதீன ஆல்பம் பாடல்களை ஸ்ருதிஹாசன் உருவாக்கியுள்ள ஸ்ருதி ஹாசனின் இந்த பாடல் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

 இதன் பர்ஸ்ட் லுக் பரவலான பாராட்டுக்களைப் பெற்றதுடன் இணையம் முழுக்க பெரும் பேசுபொருளாக இருந்து வருகிறது. சற்றுமுன்னர் இப்பாடலின் டீசரை வெளியிட்டுள்ளனர். இதில் ரொமான்டிக் ஹீரோவாக மாறி, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார் லோகேஷ். இந்த பாடல் வரும் மார்ச் 25-ஆம் தேதி யூ டியூப் பக்கத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Suriya - Jyothika: யங் லுக்கில்.. லவ்வர்ஸ் போல் கஃபே முன் செல்ஃபி எடுத்து கொண்ட சூர்யா - ஜோதிகா! வைரல் போட்டோ!Inimel Releasing on 25th March | Ulaganayagan Kamal Haasan | Lokesh | Shruti Haasan | Mahendran