Pugazh Net Worth: 50 ரூபாய்க்கு கிளீனராக வேலை பார்த்த.. விஜய் டிவி புகழ் இன்று இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா

First Published Apr 4, 2024, 12:35 PM IST

விஜய் டிவி தொலைக்காட்சி மூலம் தன்னுடைய காமெடி திறமையை வெளிப்படுத்தி, இன்று பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் டிவி புகழின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 

விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த 2017-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட 'சிரிப்புடா' என்கிற நிகழ்ச்சியில் போட்டியாளராக என்ட்ரி கொடுத்த புகழ், பின்னர் வடிவேலு பாலாஜி சிபாரிசால் 'கலக்க போவது யாரு' சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த போது, தன்னுடைய பண தேவைக்காக, கார் கிளீனராக பணியாற்றி வந்துள்ளார். இதன் மூலம் கிடைக்கும் 50 ரூபாயில் தான் இவரின் ஜீவனாக இருந்து வந்தது.
 

pugazh

தன்னுடைய கஷ்டத்தை வெளிக்காட்டி கொள்ளாமல், முன்னேற வேண்டும் என்கிற இலக்குடன் ஓடிக்கொண்டிருந்த புகழுக்கு விஜய் டிவி... அடுத்தடுத்த வாய்ப்புகளை கொடுத்தது. 

Kalvan Review : ஜிவி பிரகாஷின் ‘கள்வன்’ கலக்கலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
 

இதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து கொண்டு 2019-ஆம் ஆண்டு வெள்ளித்திரையில் நடிகராக அறிமுகமானார். அந்த வகையில் இவர் நடித்த, சிக்ஸர், தாதா 87, கைதி போன்ற படங்களிலில் சிறிய வேடம் என்றாலும்... சிறப்பான அறிமுகமாக அமைந்தது.
 

விஜய் டிவி தொலைக்காட்சியின் மெட்டீரியலாகவே மாறிவிட்ட புகழ், 2019-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட... 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி புகழ் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது மட்டும் இன்றி, புகழுக்கு பல படங்களின் வாப்புகளையும் பெற்று தந்துள்ளது.

27 வளர்ப்பு பசங்க.. 24 மணி நேரமும் யார் வந்தாலும் சாப்பாடு.. ரோபோ சங்கர் மருமகனின் மறுபக்கம்..

லட்ச கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகராக மாறியுள்ள புகழ், கதையின் நாயகனாக நடிக்க 50 முதல் 80 லட்சம் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. இவர் கதையின் நாயகனாக நடித்துள்ள ஜூ கீப்பர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதே போல் காமெடியானாக நடிக்க 20 முதல் 25 லட்சம் வரை சம்பளமாக பெருகிறாராம்.

விரைவில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி துவங்க உள்ள நிலையில், அதிலும் கோமாளியாக பங்கு பெற உள்ளார். சோசியல் மீடியாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள விஜய் டிவி புகழ், ஒரு சில வருடங்களிலேயே கோடிகளில் சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார். 

தனுஷின் 3 படத்தில் கமிட் செய்த பின்னர்... ஸ்ருதிஹாசனுக்காக ஐஸ்வர்யாவால் வெளியேற்றப்பட்ட நடிகை யார் தெரியுமா?

அதன் படி இவரின் சொத்து மதிப்பு குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், புகழ் 2 முதல் 3 கோடி வரை சொத்துக்கு அதிபதி என கூறப்படுகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டி பென்சி என்பவரை புகழ் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!