பிவி ஷங்கர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார், இவானா நடிப்பில் வெளியாகி இருக்கும் கள்வன் திரைப்படத்தின் எக்ஸ் தள விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது கோலிவுட்டில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ். இவர் நடிப்பில் தற்போது மாதத்திற்கு ஒரு படம் ரிலீஸ் ஆன வண்ணம் உள்ளது. கடந்த மாதம் தான் ரெபல் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த நிலையில், அடுத்ததாக இரண்டு படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. அதில் ஒன்று தான் கள்வன். அப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இப்படத்தை பிவி ஷங்கர் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார்.

கள்வன் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக லவ் டுடே நாயகி இவானா நடித்திருக்கிறார். மேலும் பாரதிராஜா, விஜய் டிவி தீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைத்து உள்ளார். ராட்சசன், முண்டாசுப்பட்டி போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிவி ஷங்கர் தான் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தின் முதல் காட்சி பார்த்த நெட்டிசன்கள் தங்கள் விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... Actor Murali Daughter : அதர்வா தெரியும்.. நடிகர் முரளியின் மகள் யார், என்ன செய்றாங்க தெரியுமா?

கள்வன் அருமையான திரைப்படம், ஜிவி பிரகாஷ்குமார் வெறித்தனமாக நடித்துள்ளார். தீனாவின் நடிப்பும் வேறமாரி. இவானாவின் நடிப்பும் சூப்பர். இயக்குனர் பிவி ஷங்கருக்கு வாழ்த்துக்கள். நிறைய வெற்றிகள் ஆன் தி வே என பாராட்டி பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

கள்வன் ஒரு சினிமேட்டிக் மாஸ்டர் பீஸ். ஜிவி பிரகாஷ், பாரதிராஜா, இவானா, நடிகர் தீனா என அனைவரும் இணைந்து ஒரு தரமான படத்தை கொடுத்துள்ளார்கள். அனைத்து தரப்பு ஆடியன்ஸையும் கவரும் வண்ணம் இப்படம் இருக்கிறது. இந்த படத்துக்கு பின்னணியில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

கள்வன் அனைத்து சரியாக உள்ள ஒரு தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும் படமாக உள்ளது. நேர்த்தியான தொடங்கும் படம், அனைத்து கேரக்டரின் உதவியோடு முழுமையாக நிறைவடைகிறது. ஜிவி பிரகாஷ் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி உள்ளார். ஒவ்வொரு காட்சியும், கேரக்டரும் சிறப்பாக எழுதப்பட்டு உள்ளது. மற்றுமொரு பிரெஷ் ஆன திரைப்படம் என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

கள்வன் படம் மிகவும் பிடித்திருந்தது. எமோஷனும் ஹியூமரும் நிறைந்த அழகான படமாக இது உள்ளது. ஜிவிபிரகாஷ் மற்றும் பாரதிராஜாவின் நடிப்பு ரசிக்கும் படியாக இருந்தது என பாராட்டி உள்ளார்.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்...Vandana Srikanth : ஹீரோயின்களை மிஞ்சும் அழகு.. நடிகர் ஸ்ரீகாந்த் மனைவி வந்தனாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்