Vignesh Shivan Love: விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் காதலுக்கு ‘லவ் குரு’வாக இருந்தது இந்த மாஸ் நடிகர் தானாம்..!

First Published Apr 7, 2024, 8:35 AM IST

நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், தங்களுக்கு இடையே காதல் மலர முக்கிய காரணமாக இருந்த நடிகர் பற்றி பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

Vignesh Shivan, Nayanthara

கோலிவுட்டில் டாப் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளன. வாடகைத் தாய் மூலம் விக்கி - நயன் ஜோடி பெற்றுக்கொண்ட இந்த குழந்தைகளுக்கு உயிர், உலக் என பெயரிட்டுள்ளனர். விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கடந்த 2015-ம் ஆண்டு வெளிவந்த நானும் ரெளடி தான் படத்தின் இணைந்து பணியாற்றினர்.

Vignesh Shivan, Nayanthara Love

அப்போது தான் இவர்களிடையே காதலும் மலர்ந்தது. இதையடுத்து சுமார் 7 ஆண்டுகள் காதலித்த பின்னர் தான் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர். இந்த நிலையில், இவர்களின் காதலுக்கு அடித்தளம் அடித்த நபர் பற்றியும், பின்னர் நயன்தாரா உடன் காதல் மலர்ந்தது பற்றியும் இயக்குனர் விக்னேஷ் சிவன், ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் முதன்முறையாக கூறியிருக்கிறார். அதில் அவர் என்ன சொன்னார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... Kollywood Movies : உலக நாயகனோடு மல்லுக்கட்ட தயாரான "அசுரன்" - ஜூன் மாதத்தை குறிவைக்கும் டாப் 3 படங்கள்!

dhanush

அதன்படி யாரால் இருவருக்கும் இடையேயான காதல் தொடங்கியது என்கிற கேள்விக்கு, தனுஷ் தான் என பதிலளித்த விக்னேஷ் சிவன், தொடர்ந்து கூறுகையில், அவர்தான் தன்னை நானும் ரெளடி தான் கதையை நயன்தாராவிடம் சொல்லச் சொன்னதாகவும், நயனுக்கு பிடித்துப்போக, அவர் படத்துக்குள் வந்ததால் தான் நடிகர் விஜய் சேதுபதியும் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். இந்த படத்தின் மூலம் நயனுடன் பழக ஆரம்பித்து ஒரு வருடத்தில் நெருக்கமாகிவிட்டதாக விக்கி தெரிவித்தார்.

Nayanthara husband vignesh shivan

அதேபோல் நடிகை நயன்தாராவும் தங்கள் காதல் குறித்து பேசுகையில், அது இயற்கையாக நடந்ததாக கூறினார். அப்படியே வாழ்க்கையின் ஓட்டத்தில் சென்றுகொண்டிருந்த எங்களுக்கு மூன்று மாதங்கள் ஆன பின்னர் தான் இருவருக்கும் இடையே ஏதோ இருக்கிறது என தோன்றியது. அதன்பின்னரே நெருங்கி பழகி அது காதலாக மாறியதாக நயன் தெரிவித்துள்ளார். நானும் ரெளடி தான் படத்தை தனுஷ் தயாரிக்கும் முன்னர், அவர் ஹீரோவாக நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Indian 2 Release Update: 'இந்தியன் 2' படத்தின் ரிலீஸ் எப்போது? மாஸ் அப்டேட் கொடுத்த லைக்கா நிறுவனம்!

click me!