இயக்குனர் ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை தற்போது லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற நிலையில், சுமார் 18 வருடங்கள் கழித்து இந்தியன் 2 படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

'இந்தியன் 2' படப்பிடிப்பு நடந்து முடிந்த கையேடு... 'இந்தியன் 3' படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. மேலும் இன்றைய தினம், இந்தியன் 2 படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாக படக்குழு சமூக வலைதளத்தில் அறிவித்த நிலையில், பல மாதமாக 'இந்தியன் 2' படம் குறித்த அப்டேட்டை கேட்டு வந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

இன்றைய தினம் ட்ரைலர் அல்லது ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி சற்று முன் 'இந்தியன் 2' படம் எப்போது ரிலீஸ் என்கிற தகவலை பட குழு உறுதி செய்துள்ளது. ஜூன் மாதம் இந்தியன் 2 படம் வெளியாகும் என, புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போஸ்டரில் ஜீரோ டோலரன்ஸ் என்கிற வார்த்தையும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மிக பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள இந்த படத்தில், கமலஹாசனுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், உள்ளிட்ட பலன் நடித்துள்ளனர். அதேபோல் மறைந்த நடிகர் விவேக், மனோபாலா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது, லைக்கா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Scroll to load tweet…