Vaadivaasal : வாடிவாசல் வருமா? வராதா? மெளனம் காக்கும் சூர்யா... மனம்திறந்த வெற்றிமாறன்

First Published Apr 30, 2024, 9:03 AM IST

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட வாடிவாசல் திரைப்படம் குறித்து எந்தவித அப்டேட்டும் வெளியாகாத நிலையில் அது பற்றி இயக்குனரே மனம்திறந்து பேசி இருக்கிறார்.

Suriya, vetrimaaran

தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் வெற்றிமாறன். அவர் இயக்கத்தில் கடைசியாக விடுதலை திரைப்படம் வெளியானது. சூரி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதியும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

Vaadivaasal Movie

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. தற்போது தென்காசி அருகே விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க, வெற்றிமாறனின் அடுத்த படமான வாடிவாசல் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஏனெனில் தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக வாடிவாசல் உள்ளது. இதில் சூர்யா நாயகனாக நடிக்க உள்ளார்.

இதையும் படியுங்கள்... வாய மூடிட்டு இருக்கனும்; இனி இளையராஜாவை பத்தி பேசுனா அவ்வளவுதான்- வைரமுத்துவுக்கு வார்னிங் கொடுத்த கங்கை அமரன்

vaadivaasal Update

வாடிவாசல் படம் குறித்த அறிவிப்பு கடந்த 2020-ம் ஆண்டே வெளிவந்தது. அப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளதாகவும், ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைப்பாளராக கமிட் ஆகி இருப்பதாகவும் அறிவித்தனர். அதன்பின்னர் அப்படத்தின் டெஸ்ட் ஷூட் ஒன்றை சென்னையில் நடத்தினர். இதில் சூர்யா ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும்படியான காட்சிகள் படமாக்கப்பட்டது.

Vetrimaaran opens up about Vaadivaasal

ஆனால் அதன்பின்னர் வாடிவாசல் படம் பற்றி எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. ஒருகட்டத்தில் சூர்யாவும் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆனதால், வாடிவாசல் படம் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் உலா வந்தன. ஆனால் படக்குழு அதை திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில், வாடிவாசல் பற்றிய அப்டேட்டுகள் எப்போ வெளியாகும் என்பது பற்றி விருது விழா ஒன்றில் பேசிய வெற்றிமாறன். விடுதலை 2 முடிந்ததும் அடுத்து முழுக்க முழுக்க வாடிவாசல் அப்டேட் தான் வரும் என கூறி இருக்கிறார். அவரின் இந்த அறிவிப்பால் சூர்யா ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

இதையும் படியுங்கள்... Aijith Kumar : கோலிவுட் உலகின் Self Made ஹீரோ.. AKயின் வியக்க வைக்கும் டாப் 10 கார் மற்றும் பைக் கலெக்ஷன்!

click me!