Veetla Vishesham: ஆர்.ஜே. பாலாஜி ஹேப்பியோ..ஹேப்பி..முதல் நாள் முடிவிலே கோடியில் வசூல் செய்த வீட்ல விசேஷம் படம்

First Published Jun 18, 2022, 11:22 AM IST

Veetla Vishesham box office collection: ஆர்.ஜே. பாலாஜியின் நடிப்பில் வெளியான  வீட்ல விசேஷம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

veetla-vishesham

பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியான 'பாதாய் ஹோ' என்கிற காமெடி படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளார். இப்படத்துக்கு ‘வீட்ல விசேஷங்க’ என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

veetla-vishesham

ஆர்.ஜே.பாலாஜி வானொலியில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்டார். இதையடுத்து, சினிமாவில் முதலில் காமெடி நடிகராக அறிமுகமாகி நானும் ரவுடி தான், தேவி, இவன் தந்திரன் போன்ற படங்களில் நடித்து அசத்தினார். அவர் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக தன்னை உயர்த்தி கொண்டு இப்போது சினிமாவில் இயக்குனர், நடிகர் என கலக்கி வருகிறார்.

veetla-vishesham

ஆம் இவர், கடந்த 2019-ம் ஆண்டு வெளியான எல்.கே.ஜி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து நயன்தாராவுடன் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்த அவர், அப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். இப்படம் கடந்த 2020-ம் ஆண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

veetla-vishesham

இதையடுத்து, ஆர்.ஜே.பாலாஜி தற்போது இயக்கி, நடித்துள்ள திரைப்படம் வீட்ல விசேஷம். இந்த படம் நேற்று  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியான 'பாதாய் ஹோ' என்கிற காமெடி படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘வீட்ல விசேஷங்க’ திரைப்படம். 
 

veetla-vishesham


இந்த படத்தில், ஊர்வசி, சத்யராஜ், யோகிபாபு, அபர்ணா பாலமுரளி, மயில்சாமி, ஆர்.ஜே.பாலாஜி, புகழ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.இப்படத்தை வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த நிலையில், இந்த படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாள் முடிவில் ரூ. 1.5 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாளே கோடிகளில் வசூல் செய்ததால் ஆர்.ஜே.பாலாஜி செம்ம குஷியில் உள்ளாராம். 


 மேலும் படிக்க....Samantha: நான் எத்தனையோ இரவுகள் தூக்கமில்லாமல் தவித்தேன்...நடிகை சமந்தா ஓபன் டாக்...

click me!