தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த அட்லீ! ஆனால் இயக்குனர் இல்லை.. விஜய் - சமந்தா ரோலில் நடிக்க போறது யார் தெரியுமா?

First Published Jan 14, 2024, 5:13 PM IST

'தெறி' படத்தின் ஹிந்தி ரீமேக் உருவாக உள்ள நிலையில், இப்படத்தின் பூஜை இன்று மும்பையில் சிறப்பாக போடப்பட்டுள்ளது.
 

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'தெறி'. தளபதி விஜய் வைத்து இயக்குனர் அட்லி இயக்கிய முதல் திரைப்படமும் இதுதான். இந்த படத்தை கலைப்புலி தாணு தன்னுடைய வி கிரியேஷன் மூலம் தயாரித்திருந்தார்.

மேலும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க, நடிகை எமி ஜாக்சன் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார். நடிகை மீனாவின் மகள் நைநிகா இந்த படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

Pongal 2024 Gallery: நடிகை ரோஜா முதல்.. பொதுமக்கள் அனைவரும் குதூகலமாக கொண்டாடிய போகி பண்டிகை! போட்டோஸ்!

ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் வெளியான இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.  இப்படம் சுமார் 75 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில்,  150 கோடி வசூலித்த மாஸ் காட்டியது. 

இப்படம் வெளியாகி சுமார் எட்டு வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளார் அட்லீ. இதற்கான பூஜை மும்பையில் போடப்பட்டது. இதில் இயக்குனர் அட்லி, பிரியா அட்லி, வருன் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Archana: பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா 50 லட்சம் பரிசு தொகையுடன்.. வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஹிந்தியில் உருவாகும் தெறி படத்தை அட்லீதான் தயாரிக்க உள்ளார். காளீஸ் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். ஏற்கனவே அட்லீ 'சங்கிலி புங்கிலி கதவ தொற', 'அந்தகாரம்'  போன்ற சில படங்களை தயாரித்துள்ள நிலையில், தற்போது தெறி படத்தை ஹிந்தியில் தயாரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்.

மேலும் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் வருண் தவான் நடிக்க சமந்தா ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எமி ஜாக்சன் நடித்த வேடத்தில் வாமிகா நடிக்க உள்ளதாகவும், மற்ற  பிற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ayalaan Vs Captain Miller: வசூலில் கடும் போட்டிபோடும் அயலான் - கேப்டன் மில்லர்! 2-வது நாள் பாக்ஸ் ஆபீஸ் விவரம்

அதை போல் விஜய்க்கு இந்த படத்தில் வில்லனாக நடித்த மறைந்த இயக்குனர் மகேந்திரன் கதாபாத்திரத்திலும்,  மீனா மகள் நைனிகாவின் வேடத்திலும் யார் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!