சென்னை சூலை பகுதியைச் சேர்ந்த 5 நண்பர்கள் விடுமுறைக்காக புதுச்சேரி சென்று விட்டு காரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது கார் கல்பாக்கம் அருகே வயலூர் பகுதியில் வந்துக்கொண்டிருந்தது. அப்போது திடீரென குறுக்கே வந்த பசுமாடு மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த கார் மூன்று முறை பல்டி அடித்து பின் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
சென்னை ஈசிஆரில் அதிவேகமாக வந்த கார் குறுக்கே வந்த மாடு மீது மோதி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை சூளை பகுதியைச் சேர்ந்த 5 நண்பர்கள் விடுமுறைக்காக புதுச்சேரி சென்று விட்டு காரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். கார் கல்பாக்கம் அருகே வயலூர் பகுதியில் வந்துக்கொண்டிருந்தது. அப்போது திடீரென குறுக்கே வந்த பசுமாடு மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த கார் மூன்று முறை பல்டி அடித்து பின் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதையும் படிங்க: TN Special Buses: வீக் எண்டில் சொந்த ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்.. குட் நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை!
இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. உடனே இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இரண்டு பேரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் காரில் பின்புறத்தில் சிக்கி 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
உருக்குலைந்த காரில் சிக்கிய 3 பேரின் உடல்களை மிஷின் மூலம் வெட்டி எடுத்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த 2 பேர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 5ஆக உயர்ந்தது.
இதையும் படிங்க: Chennai Crime News: சென்னையில் காதலி கண்முன்னே பயங்கரம்! பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் ஓட ஓட விரட்டி படுகொலை!
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்தவர்கள் சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (22), வடபழனி பகுதியை சேர்ந்த ஏழுமலை (30), சூளை எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த விக்கி ( 28 ), மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த யுவராஜ் ( 24 ) என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.