TN Special Buses: வீக் எண்டில் சொந்த ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்.. குட் நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை!

Published : May 15, 2024, 06:39 AM IST

முகூர்த்தம் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து மே 17ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 1,545 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

PREV
14
TN Special Buses: வீக் எண்டில் சொந்த ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்.. குட் நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை!
Transport Department

இதுகுறித்து தமிழக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்: 17/05/2024 (வெள்ளிக்கிழமை) 18/05/2024 (சனிக்கிழமை) மற்றும் 19/05/2024 (ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்தம் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றம் பிற இடங்களிலிருந்து கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

24
Kilambakkam CMBT

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில். கன்னியாகுமரி, தூத்துக்குடி. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 17/05/2024 (வெள்ளிக் கிழமை) அன்று 555 பேருந்துகளும் 18/05/2024 (சனிக்கிழமை) அன்று 645 பேருந்துகளும், 19/05/2024 (ஞாயிற்றுக் கிழமை) 280 பேருந்துகளும் கோயம்பேட்டிலிருந்து நாகை. வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 17/05/2024, 18/05/2024 மற்றும் 19/05/2024 ( வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை) அன்று 195 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

34
Weekend Special Buses

எனவே, தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 17/05/2024 (வெள்ளிக் கிழமை) அன்று 555 பேருந்துகளும் 18/05/2024 (சனிக்கிழமை) அன்று 645 பேருந்துகளும், 19/05/2024 (ஞாயிற்றுக் கிழமை) 280 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 17/05/2024 வெள்ளிக் கிழமை அன்று 65 பேருந்துகளும் 18/05/2024 சனிக்கிழமை அன்று 65 பேருந்துகளும் மற்றும் 19/05/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று 65 பேருந்துகளும், மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

44
Government bus

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories