மீண்டும் இணைந்த ராட்சசன் கூட்டணி.. புது வரவாக அப்படத்தில் கமிட்டான ட்ரெண்டிங் நாயகி - யாருப்பா அது?

First Published Mar 12, 2024, 10:07 PM IST

Actor Vishnu Vishal : பிரபல நடிகர் விஷ்ணு விஷால் தனது 21வது திரைப்படத்தில் பிரபல இயக்குனர் ராம்குமார் அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

Ratchasan

கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "ராட்சசன்" என்கின்ற திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரானின் மிரட்டும் இசையில், இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், காளி வெங்கட் மற்றும் அம்மு அபிராமி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் அந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். 

பாஜக அழைத்து உண்மை தான்..! இணையாததற்கு இது தான் காரணம்? திவ்யா சத்யராஜ் வெளியிட்ட வீடியோ!

Vishnu Vishal 21

விஷ்ணு விஷாலின் திரை வாழ்க்கையில் மிக மிக முக்கிய திரைப்படமாக "ராட்சசன்" மாறியது என்றால் அது மிகையல்ல. இயக்குனர் ராம்குமார் ஏற்கனவே விஷ்ணு விஷாலை வைத்து "முண்டாசுப்பட்டி" என்கின்ற மாபெரும் கமர்சியல் திரைப்படத்தை கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஷ்ணு விஷாலின் 21 வது திரைப்படத்தையும் ராம்குமார் தான் இயக்கி வருகிறார். 

Mamita Baiju

இந்த நிலையிக் இந்த திரைப்படத்தில் மலையாள திரை உலகில் தற்பொழுது ட்ரெண்டிங்கில் உள்ள நாயகி இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. ப்ரேமலு மற்றும் ஜிவி பிரகாஷின் ரெபெல் திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகை மமிதா பாய்ஜு தற்பொழுது விஷ்ணு விஷால் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அட நம்ம சுந்தரி சீரியல் ஸ்ரீகோபிகாவா இது.. நீச்சல் குளத்தில் கொடுத்த கிளாமர் போஸ் - லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ்!

click me!