துப்பறியும் ஆனந்தன் முதல் அருவா வரை... அலப்பறையாக அறிவிக்கப்பட்டு டிராப் ஆன சூர்யாவின் 5 படங்கள் - லிஸ்ட் இதோ

First Published Feb 6, 2024, 1:21 PM IST

தமிழ் திரையுலகில் தரமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்தெடுத்து நடித்து வரும் நடிகர் சூர்யா, இதுவரை கைவிட்ட திரைப்படங்களை பற்றி பார்க்கலாம்.

Suriya Dropped Movies

கோலிவுட்டில் எந்தவித கேரக்டர் கொடுத்தாலும் அதனை அசால்டாக நடித்து அப்ளாஸ் வாங்கும் நடிகர் தான் சூர்யா. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதைத்தொடர்ந்து சுதா கொங்கராவின் புறநானூறு, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் போன்ற படங்களில் நடிக்க உள்ள சூர்யா, இதுவரை தமிழ் சினிமாவில் நடிக்க கமிட் ஆகி பின்னர் டிராப் ஆன படங்களை பற்றி பார்க்கலாம்.

துப்பறியும் ஆனந்தன் (thuppariyum anandhan)

கவுதம் மேனன் - சூர்யா கூட்டணியில் ஒரு டிடெக்டிவ் கதையம்சம் கொண்ட படமாக உருவாக இருந்தது தான் துப்பறியும் ஆனந்தன். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரெல்லாம் வெளியிட்டு அலப்பறையாக அறிவித்தனர். ஆனால் அறிவிப்போடு இப்படம் நின்றுபோனது. புத்தகத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுக்க இருந்தர் கவுதம் மேனன்.

துருவ நட்சத்திரம் (Dhruva natchathiram)

கவுதம் மேனன் - சூர்யா கூட்டணியில் டிராப் ஆன மற்றுமொரு திரைப்படம் துருவ நட்சத்திரம். இப்படத்தை விக்ரமை வைத்து கவுதம் மேனன் எடுத்துவிட்டாலும், இதன் கதையை அவர் முதன்முதலில் சொன்னது சூர்யாவுக்கு தான். ஆனால் அவருக்கு கதையில் திருப்தி இல்லாததால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். தற்போது விக்ரம் நடித்தும் இப்படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... படிப்பில் மட்டுமல்ல விளையாட்டிலும் சூர்யா மகள் கில்லி தான்... பதக்கம் வென்று பெற்றோருக்கு பெருமை சேர்த்த தியா

இரும்புக் கை மாயாவி (irumbu kai mayavi)

சூர்யாவின் கனவு படங்களில் ஒன்றாக உள்ளது இரும்புக் கை மாயாவி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருந்தார். மாநகரம் படத்துக்கு பின் இதுகுறித்த போஸ்டர் உடன் அறிவிப்பும் வெளியானது. ஆனால் பட்ஜெட் பெரிதாக இருந்ததால் அப்படம் அந்த நேரத்தில் கிடப்பில் போடப்பட்டது. இருப்பினும் அதனை எடுத்தே தீருவேன் என கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கிறார் லோகேஷ். அது கைகூடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அருவா (Aruvaa)

சூர்யா - ஹரி கூட்டணி என்றால் படம் கன்பார்ம் ஹிட் என சொல்லும் அளவுக்கு, இவர்கள் கூட்டணியில் இதுவரை வெளிவந்த வேல், ஆறு, சிங்கம் படத்தின் மூன்று பாகங்கள் என ஐந்து படங்களும் மாபெரும் வெற்றியை ருசித்தன. இவர்கள் கூட்டணியில் ஆறாவதாக உருவாக இருந்த திரைப்படம் தான் அருவா. கடந்த 2019-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இப்படம், கொரோனா ஊரடங்கால் அறிவிப்போடு நின்றுபோனது.

வணங்கான் (vanangaan)

சூர்யா நடித்து டிராப் ஆன மற்றுமொரு திரைப்படம் வணங்கான். பாலா இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் ஒரு மாத ஷூட்டிங் முடிந்த நிலையில், இக்கதை தனக்கு செட் ஆகவில்லை என கூறி அப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சூர்யா. பின்னர் இந்த கதையை அருண்விஜய்யை வைத்து அதே பெயரில் இயக்கி முடித்துள்ளார் பாலா. இப்படம் இந்த ஆண்டு திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... கையில் டாட்டூவுடன்... மெர்சலான லுக்கில் ரசிகர்கள் மனதை மெல்ட் செய்யும் சூர்யா! வைரலாகும் போட்டோ ஷூட் கிளிக்!

click me!