கேப்டன் விஜயகாந்திற்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்து உள்ளதற்கு நடிகர் ரஜினிகாந்த் தன் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. கேப்டனின் மறைவுக்கு பின்னர் அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறை சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
அந்த விருது விழா அண்மையில் டெல்லியில் நடைபெற்றபோது கேப்டன் விஜயகாந்த் சார்பில் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கையால் அவ்விருதை பெற்றுக்கொண்டார். இந்த நிலையில், கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது குறித்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
undefined
இதையும் படியுங்கள்... Vijayakanth: கேப்டன் சார்பாக பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்டு கண்கலங்கிய பிரேமலதா விஜயகாந்த்!
அதில் அவர் பேசியதாவது : “என்னுடைய அருமை நண்பர் அமரர் விஜயகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது கொடுத்து கவுரவித்துள்ளார்கள். ரொம்ப மகிழ்ச்சி. அதுமட்டுமின்றி, இந்திய நாட்டின் பத்ம விருதுகள் 2024 புத்தகத்தில் விஜயகாந்தின் வரலாற்றையும் பதிவிட்டுள்ளார்கள். அது அவருடைய பெயருக்கு இன்னும் பெருமை சேர்க்கிறது.
விஜயகாந்த், நம்முடன் இல்லை என்பதை இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. டக்குனு தோன்றி பல சாதனைகளை செய்து அப்படியே மறைந்துவிட்டார். இனிமே விஜயகாந்த் மாதிரி ஒருத்தரை பாக்கவே முடியாது. அவரை நான் ரொம்ப மிஸ் பண்றேன். மதுரையில் பிறந்த ஒரு மதுரைவீரன் கேப்டன் விஜயகாந்த். அவர் நாமம் வாழ்க, நன்றி” என நெகிழ்ச்சியுடன் பேசி உள்ளார் ரஜினி.
இதையும் படியுங்கள்... வனிதா வீட்டை ஆபாச பட ஷூட்டிங்கிற்காக பயில்வான் பயன்படுத்தினார்... சுசித்ரா சொன்ன பகீர் தகவலால் பதறிய கோலிவுட்