July month Horoscope 2022: ஜூலை மாதம் முழுவதும் குபேரனின் நேரடி அருள் பெறும் ராசிகள்...உங்கள் ராசி என்ன..?

First Published Jun 21, 2022, 3:11 PM IST

July month Horoscope 2022: ஜூலை மாதத்தில் பல முக்கிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றப் போகின்றன. இது 12 ராசிகளின் மனித வாழ்வில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் இருக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம்.

panchang

ஜோதிடத்தின் பார்வையில், கிரகங்களின் பெயர்ச்சி அல்லது ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதம் பிறக்கும் போது அனைத்து முக்கிய கிரகங்களும், தங்கள் ராசியை மாற்றுகின்றன. அப்படி, ஒவ்வொரு கிரகமும் ராசியை மாற்றும் போதெல்லாம், அது12 ரசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இது சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். 

ஆண்டின் ஏழாவது மாதமான ஜூலை மாதம் தொடங்க உள்ளது. ஜூலை மாதத்தில் சில முக்கிய கிரகங்கள் தங்கள் ராசியை மாறப் போகின்றன.  அப்படியாக, ஜூலை 2 ஆம் தேதி, செல்வம், பெருமை, திருமண வாழ்க்கையின் காரணியான புதன் கிரகம் ஜெமினிக்குள் நுழையும். அதன் பிறகு  ஜூலை 16-ம் தேதி கிரகங்களின் அரசனான சூரியன்  சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். இதனுடன் செவ்வாய், சுக்கிரன் மாற்றமும் அடுத்த மாதம் நடக்கும். இந்த கிரகப் பெயர்ச்சியால் அடுத்த மாதம் முழுதும் குறிப்பிட்ட ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் உண்டு. அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

மிதுனம்: 

மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு ஜூலை மாதம், கிரகங்களின் ராசி மாற்றம் சாதமாக இருக்கும். திடீர் பண வரவு உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வியாபாரம் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். நீங்கள் முதலீடு செய்வதற்கு ஜூலை மாதம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்: 

சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு ஜூலை மாதம், கிரகங்களின் ராசி மாற்றம் மகிழ்ச்சியாக இருக்கும்.தடைபட்ட பல காரியங்களை முடிக்க முடியும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். வேலையில் புதிய பொறுப்புகள் உங்களுக்கு வழங்கப்படலாம். நீங்கள் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். கணவன்- மனைவி உறவு வலுப்படும். 
 

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு ஜூலை மாதம், மிகுந்த எச்சரிக்கை அவசியம். இந்த மாதம் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம்.  இருப்பினும், நீங்கள் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால திட்டங்கள் நிறைவேறும். வாழ்வில் புது ஒளி பிறக்கும்.

 மேலும் படிக்க...Shukra Peyarchi 2022: சுக்கிரன் அருளால் இன்னும் இரண்டு நாளில் நிகழும் அதிசயம்...அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள்..

click me!