இன்னும் அதிகாரத்தில் தான் இருக்கிறார்.. சாட்சியை கலைத்துவிடுவார்- செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கொடுக்காதீங்க -ED

By Ajmal Khan  |  First Published Apr 29, 2024, 11:36 AM IST

சட்ட விரோத பணம் பறிமாற்றம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாஜிக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி எம்எல்ஏவாக இருப்பதால சாட்சியை கலைத்து விடுவார் என உச்சநீதிமன்றத்தில் தெரி


செந்தில் பாலாஜி கைது

தமிழகத்தில் திமுக - பாஜக இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தது. அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை பல கட்டங்களை கடந்த பின்னர் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செந்தில் பாலாஜி ஜாமின் கேட்டு தொடர்ந்து நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்தினார்.

Tap to resize

Latest Videos

EVM : ஊட்டியை தொடர்ந்து ஈரோட்டிலும் வாக்குப்பதிவு இயந்திர அறை சிசிடிவி திடீரென ஆப்.! அரசியல் கட்சிகள் ஷாக் 

ஜாமின் கொடுக்க அமலாக்கத்துறை எதிர்ப்பு

ஆனால் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கொடுக்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில் உச்சநீதிம்ன்றத்தில் ஜாமின் தொடர்பாக மேல்முறையீட்டு மனு ஒன்றை செந்தில் பாலாஜி தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமின் மனு மீது ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டது. இந்தநிலையில், இன்று அமலாக்கத்துறை 458 பக்கம் கொண்ட மனு தாக்கல் செய்தது.

அதில்,  செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லாவிட்டாலும், இன்னும் எம்எல்ஏவாக உள்ளார். எனவே செந்தில் பாலாஜி சாட்சியங்களை கலைக்க கூடும் எனவே செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, 320 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன் ஆனால் வேண்டுமென்றே இந்த வழக்கில் தாமதம் செய்ய வேண்டும் என்பதற்காக கடைசி நேரத்தில் பதில் மனுவை அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கிறது என செந்தில் பாலாஜி தரப்பு குற்றச்சாட்டுப்பட்டது. 

அப்போது செந்தில் பாலாஜி வழக்கில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்காக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது இதனையடுத்து அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவை நாங்கள் இன்னமும் படித்து பார்க்கவில்லை எனவே வழக்கின் விசாரணையை மே 6ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். 
 

MK STALIN : கஞ்சா பொட்டலத்தோடு முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வந்த பாஜக நிர்வாகி.. அதிரடியாக சுற்றி வளைத்த போலீஸ்

click me!