ராஜஸ்தானை சேர்ந்த பீடா கடைக்காரர் பூல்சந்த் என்பவர் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கத்தை அணிந்துள்ளது பேசுபொருளாகி உள்ளது
ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் சத்தா பஜார் உள்ளது. இந்த பஜாரில் முல்சா புல்சா எனும் பீடா கடை உள்ளது. இந்த கடையை பூல்சந்த் என்பவர் நடத்தி வருகிறார். சின்னஞ்சிறு கடையை நடத்தி வரும் பூல்சந்த், வெற்றிக்கான தனது அசாதாரண பயணத்தின் மூலம் உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளை வசீகரித்து வருகிறார்.
ரூ.2 கோடி மதிப்புள்ள ஆடம்பரமான தங்க நகைகளை அணிந்திருக்கும் பூல்சந்த், சந்தையின் சலசலப்புகளுக்கு மத்தியில் தனித்து நிற்கிறார். தங்க செயின்கள், பிரேஸ்லட்டுகள், காதணிகள் என தங்கத்தால் ஜொலிக்கும் பூல்சந்த், பீடா தயாரிக்கும் காட்சியை காண மக்கள் கூடுகின்றனர். பான், பீடா பிரியர்களை திருப்திப்படுத்துவது மட்டுமல்லாமல், மக்களை ஈர்க்கும் நபராகவும் அப்பகுதியில் புகழ் பெற்று விளங்குகிறார்.
undefined
இரண்டு கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகளை தாம் அணிந்திருப்பதாக கூறும் பூல்சந்த், அனைத்து நகைகளையும் அணிந்து கொண்டே கடையை திறந்து பான் விற்பனை செய்கிறார். அவரை பார்க்க அவரது கடையில் எப்போதும் கூட்டம் அலை மோதுகிறது.
தேர்தல் வந்தால் பிரதமர் மோடி இப்படித்தான் பேசுவார்: அன்றே கணித்த சு.வெங்கடேசன் எம்.பி.!
பூல்சந்தின் குடும்பமே பாரம்பரியமாக பான் கடையை நடத்தி வருகிறது. அவரது தற்போதையை கடை 93 ஆண்டுகள் பழமையானதாகும். இந்த கடையை மூல்சந்த் மற்றும் பூல்சந்த் என்ற சகோதரர்கள் நடத்தி வந்தனர், தற்போது, அவர்களது மகன்கள் கடையை நடத்தி வருகின்றனர். பல்வேறு வகையான பான் வகைகளுக்கு பெயர் பெற்ற இக்கடையில், பதினைந்து முதல் இருபது ரூபாய் என மலிவான விலையில் பான் விற்பனை செய்யப்படுகிறது.
இதுபோன்று பல்வேறு பெருமைகள் முல்சா புல்சா பீடா கடைக்கு இருந்தாலும், அக்கடையை தனித்துவமாக்குவது பூல்சந்தும், நகைகள் மீதான அவரது காதலும்தான் என்றால் அது மிகையாகாது.