நடிகை ஜோதிகா தற்போது சினிமாவில் படு பிசியாக வலம் வரும் நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து அழுத்தமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஜோதிகா... தமிழ் படங்களை தொடர்ந்து, தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான, 'சைத்தான்' 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த நிலையில், இதை தொடர்ந்து இவர் நடித்துள்ள ஸ்ரீகாந்த் என்கிற படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் புரொமோஷனுக்காக, ஜோதிகா உள்ளிட்ட படக்குழுவினர் டி-சீரிஸ் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.