Guru Peyarchi Palan 2024 Dhanusu: குரு பெயர்ச்சி பலன் 2024 : தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?

By Asianet Tamil  |  First Published Apr 29, 2024, 12:09 PM IST

இந்த குரு பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறப்போகிறது என்று பார்க்கலாம். 


ஜோதிடத்தில் சில கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக குரு பெயர்ச்சியால் சில ராசிக்கார்கள் திடீர் யோகம் ஏற்படும். இப்படி பலரின் வாழ்க்கை குரு பெயர்ச்சியால் மாறி இருக்கிறது. அந்த வகையில் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான், மே 1 முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். இந்த குரு பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறப்போகிறது என்று பார்க்கலாம். 

இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தந்த குருபகவான் தற்போது 6-ம் வீட்டிற்கு செல்கிறார். உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. செலவுகள் கட்டுங்கடங்காமல் போய்க் கொண்டிருக்கும். உறவினர்கள், தோழிகள் வீட்டு திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் செலவு செய்து பார்க்க வேண்டிய சூழல் இருக்கும். 

Tap to resize

Latest Videos

Guru Peyarchi Palan 2024 Thulam : இந்த குரு பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?

நீங்கள் சாதாரணமாக பேசுவது கூட சண்டையில் போய் முடியும். முன்கோபத்தை குறைத்து கொள்வது. உங்களின் தவறுகளை யாரேனும் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வது நல்லது. புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வீடு, மனை சொத்து வாங்க வங்கி கடன் உதவி கிடைக்கும். 

பணவரவு ஓரளவு நன்றாகவே இருக்கும், எதிர்பார்த்த தேதியில் பணம் கிடைக்காவிட்டால்ம் கடைசி நேரத்தில் பணம் வந்து சேரும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பூர்வீக சொத்து கைக்கு வந்து சேரும். வீட்டில் திருமணம், காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சிறு சிறு விபத்துகள், உடல் நல குறைவுகள் வந்து போகும். திடீர் பயணம், வீண் செலவு அதிகரிக்கும். 

விலகி சென்ற நண்பர்கள், உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்க வேண்டாம். தேவையில்லாமல் யாருக்கும் எந்த உத்தரவாதமும் கொடுக்க வேண்டாம். சின்ன சின்ன அவமானங்கள் நேரிடலாம். உங்களை பற்றிய விமர்சனங்களும் வீண் பழியும் அதிகரிக்கும். 

Guru Peyarchi Palan 2024 Viruchigam : குரு பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?

வியாபாரத்தில் கவனமாக முதலீடு செய்வது நல்லது. பங்கு தாரர்கள் உங்கள் ஆலோசனையை கேட்டுக் கொள்வார்கள். இடைத்தரர்கர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.  உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். சக ஊழியர்கள் சிலர் அவர்களின் வீழ்ச்சிக்கு நீங்கள் தான் காரணம் என்று தவறாக புரிந்துகொள்ள கூடும். சிலர் பணியில் இருந்து கட்டாய ஓய்வு பெற வேண்டிய சூழல் உருவாகும். இந்த குரு பெயர்ச்சி உங்கள் இமேஜை ஒரு படி குறைத்தாலும், உடல்நலக் குறைவை தந்தாலும், சகிப்பு தன்மையாலும் சாதூர்ய பேச்சாலும் ஓரளவு முன்னேற வைக்கும்.

தேனி மாவட்டம், குச்சனூரில் உள்ள சிவாலயத்தில் யானை வாகனத்துடன் ராஜ தோரணையில் அருள் பாலிக்கும் ஸ்ரீ ராஜ யோக தட்சிணாமூர்த்தி வியாழக்கிழமையில் கொண்டைக்கடலை மாலை சாலை வழிபடுங்கள். வெற்றிகள் தேடி வரும். 
 

click me!