இந்த குரு பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறப்போகிறது என்று பார்க்கலாம்.
ஜோதிடத்தில் சில கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக குரு பெயர்ச்சியால் சில ராசிக்கார்கள் திடீர் யோகம் ஏற்படும். இப்படி பலரின் வாழ்க்கை குரு பெயர்ச்சியால் மாறி இருக்கிறது.
அந்த வகையில் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான், மே 1 முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். இந்த குரு பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறப்போகிறது என்று பார்க்கலாம். உங்கள் 7-ம் வீட்டில் அமர்ந்திருந்த குரு பகவனான் தற்போது 8-ம் வீட்டிற்கு நுழைகிறார். 8-ல் குரு வந்துள்ளதால் எல்லாம் தள்ளிப்போகும் என்று நினைக்க வேண்டாம். 8-ல் அமர்ந்தாலும் குரு முக்கியமான வீடுகளை பார்ப்பதால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். தள்ளிப்போன வெளிநாட்டு பயணம் கூடி வரும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. எனினும் செலவுகள் வந்து கொண்டே தான் இருக்கும்.
Guru Peyarchi Palan 2024 Kanni: குரு பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
கணவன் – மனைவிக்குள் ஆரோக்கியம் வாக்குவாதங்கள் எழ வாய்ப்புள்ளது. கணவருக்கு உத்தியோகத்தில் அலைச்சலும், இடமாற்றமும் இருக்கும். சிலருகு வேலைச்சுமையும் இருக்கும். குரு 8-ல் மறைவதால் தங்க ஆபரணங்களை வாங்கவோ கடனாக கொடுக்கவோ வேண்டம். குடும்பத்தினருடன் வெளியூர் செல்லும் போது வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது நல்லது. குரு 2-ம் வீட்டை பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
சிலருக்கு வீடு, மனை வாங்க கடன் உதவி கிடைக்கும். புது வீட்டில் குடிபுகும் யோகம் உருவாகும். முடிவுகள் எடுப்பதில் குழப்பமும், தடுமாற்றமும் இருந்து கொண்டே இருக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும். சில வேலைகளை போராடி தான் முடிக்க வேண்டி இருக்கும். ஞாபக மறதியால் தங்க ஆபரணங்களை இழக்க நெரிடும்.
Guru Peyarchi Palan Simmam : குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
முன்கோபத்தால் பகைவர்களை பகைத்து கொள்ளாமல் இருப்பது நல்லது. அரசுக்கு முரணான விஷயங்களில் தலையிட வேண்டாம். சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிப்பு ஏற்படும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. இந்த குரு மாற்றம் ஒருவித படபடப்பையும், வேலைச்சுமையையும் தந்தாலும் உத்தியோகத்தில் அதிக நேரம் உழைக்க வேண்டி வரும்.
தஞ்சாவூர் – திருகருகாவூர் செல்லும் வழியில் தென்குடிதிட்டை என்ற ஊரில் உள்ள சிவாலயத்தில் ராஜகுருவாக அருள் பாலிக்கும் தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபட்டால் நல்ல முன்னேற்றம் இருக்கும்..