இந்த குரு பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறப்போகிறது என்று பார்க்கலாம்.
ஜோதிடத்தில் சில கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக குரு பெயர்ச்சியால் சில ராசிக்கார்கள் திடீர் யோகம் ஏற்படும். இப்படி பலரின் வாழ்க்கை குரு பெயர்ச்சியால் மாறி இருக்கிறது. அந்த வகையில் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான், மே 1 முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். இந்த குரு பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறப்போகிறது என்று பார்க்கலாம்.
கடந்த ஓராண்டாக உங்களின் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்து உங்களை பாடாய்ப்படுத்தி வந்த குருபகவான் தற்போது 7-ம் வீட்டிற்கு வந்து அமர்கிறார். குரு பகவான உங்கள் ராசியை பார்க்க இருப்பதால் கவலையுடன் இருந்த உங்கள் முகத்தில் இனி மகிழ்ச்சி மலரும். சின்ன சின்ன பிரச்சனைகளை கூட பெரிதாக்கி அதனால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். அடுத்தடுத்து நீங்கள் சந்தித்த கஷ்டங்கள், பிரச்சனைகள், அவமானங்கள், பிரச்சனைகள் இவற்றில் இருந்து விடுபட்டு முன்னேறுவீர்கள். கணவருடன் இருந்து வந்த பகைமை நீங்கும். சந்தேகம் விலகும். ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதால் ஒற்றுமை அதிகரிக்கும்.
Guru Peyarchi Palan 2024 Thulam : இந்த குரு பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் அரங்கேறும். உங்களை எதிர்த்த உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் அடங்கிப்போவார்கள், வளைந்து வந்து பேசுவார்கள். வருமான அதிகரிக்கும், வசதிகள் கூடும். சிலருக்கு வீடு மனை வாங்கும் யோகம் உண்டும். தள்ளிப்போன திருமணம் முடியும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம் மேம்படும், அழகு கூடும். தன்னிச்சையாக சில முடிவுகளை எடுப்பீர்கள், கணவரின் ஆதரவு கிடைக்கும். மூத்த சகோதரர் வழியில் ஆதாயம் உண்டும். உங்கள் திறமைக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த நபர்களை அடையாளம் கண்டு ஒதுக்குவீர்கள்.
விலை உயர்ந்த ரத்தினங்கள், ஆபரணங்களை வாங்குவீர்கள். சின்ன சின்ன வேலைகளை கூட அலைந்து திரிந்து தான் முடிக்க வேண்டி வரும். சொத்து வாங்கும் போது முறையான பட்டா, வில்லங்க சான்றிதழ்களை எல்லாம் வழக்கறிஞர்களை வைத்து சரி பார்த்துவிட்டு வாங்குவது நல்லது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டு பழகுவது நல்லது.
புதிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும்.
Guru Peyarchi Palan 2024 Kanni: குரு பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சிலர் சொந்தமாக தொழில் தொடங்கலாம். தடைபட்டு கொண்டிருந்த காரியங்கள் எல்லாம் முடிவுக்கு வரும். எந்த காரியத்திலும் வெற்றி கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். நிரந்தர வருமானம் கிடைக்க வழி தேடுவீர்கள். திடீர் யோகம் உண்டாகும், சொத்து வாங்குவீர்கள். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு இனி தொட்டதெல்லாம் துலங்கும் வகையில் இருப்பதுடன், பணவரவையும் தரும்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் ஏரையூர் எனும் ஊரில் உள்ள சிவாலயத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். வசதிகள் பெருகும்.