Horoscope Today: மே 17ம் தேதி செவ்வாய் மீன ராசியில் பிரவேசம்...இந்த ராசிகளுக்கு செல்வம் அள்ளிக்கொடுப்பார்....

First Published May 14, 2022, 12:01 PM IST

Sevvai Peyarchi 2022 Palangal: செவ்வாய் மே 17ம் தேதி மீன ராசிக்கு செல்கிறார். அதே சமயம் மே மாத இறுதியில் அதாவது மே 23ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த ராசி மாற்றம் எந்தெந்த ராசிகளுக்கு சிறப்பான பலன்களை தரும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

shukra

கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் கடந்த 2022 ஏப்ரல் 07 ஆம் தேதி முதல் சனி பகவான் ஆளும் கும்ப ராசிக்கு சஞ்சரித்து வருகிறார். இந்த ராசியில் இருந்து செவ்வாய் மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். எனவே, இந்த பெயர்ச்சியால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் கண்டிப்பாக சமூக நிலை தொடர்பான விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சில ராசிகளுக்கு அதிஷ்டம் வந்து சேரும். அவை எந்தெந்த ராசிகள் எனபதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Scorpio

விருச்சிகம்:
 
விருச்சிகம் ராசிக்கு அதிபதி செவ்வாய்.  இதனால், வேலையில் மாற்றம் ஏற்படலாம். பொருளாதாரம் வலுப்பெறும். உடல் நிலையில் கவனம் தேவை. வெளியூர் செல்லும் வாய்ப்பு வரும். உங்கள்  உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். செவ்வாய் கிழமைகளில்  கோவிலுக்கு சென்று முருகப்பெருமான வழிபடுங்கள்.

(Taurus)

ரிஷபம்:

செவ்வாய் இப்போது உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் உடன் அமர்ந்துள்ளார். எதிலும் மகிழ்ச்சி பிறக்கும். கடுமையாக உழைக்க வேண்டும். எதிலும், அதிக கவனம் அதிகம் தேவை. மன அழுத்தம் கூடும். தொழிலில் லாபம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். 

Gemini

மிதுனம்:

செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு நேர் எதிரில் 7வது வீட்டில் பயணம் செய்கிறார். உங்க ராசியில் ஏற்கனவே, சுக்கிரன், குரு பார்வை இருக்கும்.இந்த நேரத்தில் செவ்வாயும் இடம்மாறுவதால், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். சுபகாரியம் நடைபெறும். திருமண தடைகள் நீங்கும் வாழ்வில் வெற்றி நிச்சயம். நீண்ட நாள் எதிர்பார்த்த ஒன்று  கிடைக்கும். 

மேலும் படிக்க...குருவின் பார்வையால் கஜகேசரி யோகம் பெறும் ராசிகள்...செல்வம் செழிக்கும், கோடி நன்மை இருக்கும்!12 ராசிகளின் பலன்!

click me!