இந்தியாவில் 7 கோடி வாட்ஸ்அப் கணக்குகளுக்குத் தடை! கறாராக நடவடிக்கை எடுத்த மெட்டா!

By SG BalanFirst Published May 5, 2024, 11:00 AM IST
Highlights

டிசம்பர் மாதத் தரவுகள் அடங்கிய மற்றொரு அறிக்கை வெளிவரவிருக்கும் நிலையில், ஒட்டுமொத்தமாக தடை செய்யப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை 7 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

2023 ஜனவரி முதல் நவம்பர் வரை இந்தியாவில் கிட்டத்தட்ட 7 கோடி கணக்குகளை தடை செய்துள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு மத்தியில், டிஜிட்டல் மீடியா விதிகளுக்கு இணங்க, வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோசடி மற்றும் முறைகேடான டெலிமார்க்கெட்டிங் தொடர்பான புகார்களை வாட்ஸ்அப் நிறுவனம் கவனமாக விசாரித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. 

வாட்ஸ்அப்பின் குறைதீர்க்கும் வழிமுறைகள் மூலம் இந்தியாவில் உள்ள பயனர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இந்தியாவின் சட்டங்கள் அல்லது வாட்ஸ்அப்பின் சேவை விதிமுறைகளை மீறும் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

மார்ச் 1 மற்றும் 31 க்கு இடையில், வாட்ஸ்அப் 7,954,000 கணக்குகளை பிளாக் செய்துள்ளது. ஜனவரி 2024 இல் வாட்ஸ்அப் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஆண்டு நவம்பர் 31 வரை 69,307,254 கணக்குகளை தடை செய்துள்ளது.

ஆன்லைன் மோசடியில் இதுதான் புது ட்ரெண்ட்! உஷாரா இல்லாட்டி பேங்க் அக்கவுண்ட் காலி!

கடந்த ஆண்டு ஜனவரியில், வாட்ஸ்அப் 2,918,000 கணக்குகளை தடை செய்தது. பிப்ரவரியில் 4,597,400, மார்ச்சில் 4,715,906, ஏப்ரலில் 7,452,500, மே மாதத்தில் 6,508,000, ஜூன் மாதம் 6,611,700, ஜூலையில் 7,228,000, ஆகஸ்ட் மாதத்தில் 7,420,748, செப்டம்பரில் 71,11,000, அக்டோபரில் 7,548,000 மற்றும் நவம்பரில் 7,196,000 கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.

டிசம்பர் மாதத் தரவுகள் அடங்கிய மற்றொரு அறிக்கை வெளிவரவிருக்கும் நிலையில், ஒட்டுமொத்தமாக தடை செய்யப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை 7 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கணக்குகளில் 2 கோடிக்கும் அதிகமானவை (24,378,890) பயனர்களிடமிருந்து புகார் வருவதற்கு முன்கூட்டியே தடைசெய்யப்பட்டன என்றும் வாட்ஸ்அப் கூறுகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் பயனர்களிடமிருந்து வாட்ஸ்அப் 79,000 க்கும் மேற்பட்ட குறைகளைப் பெற்றுள்ளது. அதில், 2,398 கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிலத்தின் உரிமையாளர் யார்? கூகுள் மேப் மூலம் ஈசியா கண்டுபிடிக்கலாம்! அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

click me!