முதல் நாளை விட டபுள் மடங்கு வசூல்... பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் அரண்மனை 4 - 2 நாளில் இம்புட்டு கலெக்‌ஷனா?

First Published May 5, 2024, 10:51 AM IST

சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் அரண்மனை 4 திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பற்றி பார்க்கலாம்.

Aranmanai 4

தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் வெளியாவது டிரண்டாகும் இந்த சமயத்தில் முதன்முறையாக நான்காம் பாகம் படமாக திரைக்கு வந்துள்ளது அரண்மனை. இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2014-ம் ஆண்டு திரைக்கு வந்தது. ஹன்சிகா, சுந்தர் சி, வினய், ஆண்ட்ரியா, ராய் லட்சுமி நடிப்பில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. இயக்குனர் சுந்தர் சி தன்னுடைய கெரியரில் முதன்முறையாக இயக்கிய பேய் படம் இதுவாகும்.

Aranmanai 4 Box office

அரண்மனை படத்துக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்டார் சுந்தர் சி. இதில் சித்தார்த், திரிஷா, பூனம் பஜ்வா, ஹன்சிகா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படமும் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் ஹிட் அடித்தது. இதனால் அரண்மனை படத்தின் அடுத்தடுத்த பாகங்களை எடுக்க முடிவு செய்த சுந்தர் சி, அப்படத்தின் மூன்றாம் பாகத்தை கடந்த 2021-ம் ஆண்டு இயக்கி வெளியிட்டார்.

இதையும் படியுங்கள்... CWC 5 : குக் வித் கோமாளியில் இருந்து விலகிய நாஞ்சில் விஜயன்... அவரது இடத்தை Replace செய்யப்போவது இந்த நடிகையா?

Aranmanai 4 Box Office collection

அரண்மனை 3 திரைப்படம் விமர்சன ரீதியாக சொதப்பினாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர் அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார் சுந்தர் சி. இப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி சுந்தர் சி, யோகிபாபு, கோவை சரளா, விச்சு, விடிவி கணேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் கடந்த மே 3-ந் தேதி திரைக்கு வந்தது.

Aranmanai 4 Day 2 Collection

விறுவிறுப்பான திரைக்கதையால் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ள சுந்தர் சி இப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறார். பேமிலி ஆடியன்ஸுக்கு படம் மிகவும் பிடித்துப் போனதால், பாக்ஸ் ஆபிஸில் நாளுக்கு நாள் அரண்மனை 4 படத்தின் வசூல் எகிறிய வண்ணம் உள்ளது. அந்த வகையில் முதல் நாளில் இப்படம் ரூ. 4 கோடி வசூலித்திருந்த நிலையில், தற்போது இரண்டாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி இருக்கிறது.

இரண்டாம் நாளில் பிக் அப் ஆன இப்படம் நேற்று மட்டும் ரூ.6 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளது. இதன்மூலம் இரண்டே நாட்களில் ரூ.10 கோடிக்கு மேல் கலெக்‌ஷன் அள்ளி உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழ் சினிமாவில் வெளிவந்த ஹிட் படமாக அரண்மனை 4 உள்ளதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Ghibran : இஸ்லாமில் இருந்து ஹிந்துவா மாறிட்டேன்... மதம் மாறிய கையோடு பெயரை மாற்றிய இசையமைப்பாளர் ஜிப்ரான்

click me!