ரூ.3000 கோடிக்கு அதிபதியாக இருக்கும் நடிகருடன் டேட்டிங் செய்யும்... மணிரத்னம் பட ஹீரோயினா இது?

Published : May 18, 2024, 08:57 PM IST

பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மூத்த மகன், நாக சைதன்யாவுடன் டேட்டிங் செய்து வரும் நடிகை சோபிதா துலிபாலாவின் குழந்தை பருவ புகைப்படம் வைரலாகி வருகிறது.  

PREV
19
ரூ.3000 கோடிக்கு அதிபதியாக இருக்கும் நடிகருடன் டேட்டிங் செய்யும்... மணிரத்னம் பட ஹீரோயினா இது?

ஆந்திராவை சேர்ந்தவர், 31 வயதாகும் நடிகை தான் சோபிதா துலிபாலா. பிறப்பிலேயே வசதியான குடும்பத்தை சேர்ந்த இவரின் தந்தை வேணுகோபால் ராவ், ஒரு வணிக கடற்படை பொறியாளர் ஆவர்.  இவரின் தாயார் சாந்தா காமக்ஷி ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியராக இருந்தவர்.

29

விசாகப்பட்டினத்தில் பிறந்து வளர்ந்த இவர்,  தனது பதினாறாவது வயதில் தானே மும்பைக்கு குடிபெயர்ந்தார்.  பின்னர் கார்ப்பரேட் சட்டம் பயின்று மும்பை பல்கலைக்கழகத்தில் H.R. வணிகம் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் பயின்றார். அதே போல் பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடியில் பயிற்சி பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞரும் ஆவார்.

Aditi Rao: கல்யாண கலை வந்துடுச்சு! வெள்ளை நிற சல்வாரில்... சிம்பிள் மேக்கப்பில் பேரழகில் ஜொலிக்கும் அதிதி ராவ்
 

39

சோபிதா துலிபாலா 2010 ஆண்டு நேவி பால் பின் 2010 போட்டியிலில் கலந்து கொண்டு கடற்படை ராணி என்று முடி சூட்டப்பட்டார். இது இவருக்கு அழகி போட்டி மீதான ஆர்வத்தை தூண்டியது.
 

49
Sobhita

எனவே இவரின் கல்லூரி தோழி ஒருவர் மிஸ் ஆபீஸில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தார். அவர் மூலம் மாடலிங் உள்ளே நுழைந்தார்.  அவரே வரவிருக்கும் போட்டிக்கான ஆடிஷனுக்கு பரிந்துரைத்தார். முதல் சுற்றில் மட்டும் தகுதி பெற்றால் போதும் என்கிற மனநிலையுடன் இவர் கலந்துகொண்ட நிலையில், பல சுற்றுகள் முன்னேறி போனார்.

நடிகை பவித்ரா விபத்தில் சாகவில்லை! தற்கொலைக்கும் முன் சக நடிகர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
 

59

அதன்பிறகு, அவர் பிலிப்பைன்ஸில் நடந்த மிஸ் எர்த் 2013-இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், ஆனால் முதல் 20 இடங்களுக்குள் வரமுடியவில்லை, அதற்குப் பதிலாக மிஸ் ஃபோட்டோஜெனிக், மிஸ் பியூட்டி ஃபார் எ காஸ், மிஸ் டேலண்ட் மற்றும் மிஸ் பியூட்டிஃபுல் ஃபேஸ் ஆகிய உப தலைப்புகளில் இறங்கி கலக்கினார்.

69
Shobita Dhulipala

மாடலிங்கில் இருந்து மெல்ல மெல்ல பாலிவுட் பட வாய்ப்புகள் தேட துவங்கினார். அனுராக் காஷ்யப் இயக்கிய 'ராமன் ராகவ் 2.0' என்கிற படத்தில் அறிமுகமானார். அடுத்தடுத்து ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கிய இவர், தெலுங்கில் வெளியான 'கூடாச்சாரி' படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார். 

Idhayam: கடத்தப்படும் ஆதி! பாரதிக்கு மாப்பிள்ளை ஆன துரை, நடக்கப்போவது என்ன? இதயம் கல்யாணம் எபிசோட் அப்டேட்!

79
Shobita Dhulipala

மலையாளத்தில், நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக இவர் நடித்த 'குரூப்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தமிழில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் தமிழில் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை தேடி கொடுத்தது.

89
Naga Chaitanya-Sobhita Dhulipala

இந்நிலையில், பிரபல நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யாவுடன் சோபிதா துலிபாலா டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் வெளிநாட்டுக்கு சென்றபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானதை தொடர்ந்து, கடந்த வாரம்... இன்னும் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

'நாட்டாமை' படத்தில் குஷ்பூவுக்கு முன் நடிக்க தேர்வான நடிகை யார் தெரியுமா? 30 வருடத்திற்கு பின் வெளியான தகவல்!
 

99

3100 கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கும் இந்த வாரிசு நடிகரை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்திய, சோபிதாவின் சிறிய வயது புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories