இன்று நமது ஆர்சிபி வெற்றி பெறும் – ஜெயிலர் பட நடிகர் ஷிவராஜ் குமார் பதிவு!

By Rsiva kumar  |  First Published May 18, 2024, 9:50 PM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 68ஆவது லீக் போட்டியில் நமது ஆர்சிபி வெற்றி பெறும் என்று ஜெயிலர் பட நடிகர் ஷிவராஜ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டி தற்போது சின்னச்சுவாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. ஆனால், இந்தப் போட்டி நடைபெறுமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. பெங்களூருவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் இன்றைய போட்டியும் மழையால் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், டாஸ் போடப்பட்டது. இதில், சிஎஸ்கே டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. மேலும், ஆர்சிபி அணியில் விராட் கோலி மற்றும் ஃபாப் டூப்ளெசிஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ஒரே மைதானத்தில் அதிக ரன்கள் எடுத்து முதலிடம்: 3000 ரன்களை கடந்து சாதனை படைத்த விராட் கோலி!

Tap to resize

Latest Videos

undefined

முதல் 3 ஓவர்களில் ஆர்சிபி 31 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கீடு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கு பிறகு போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. மழைக்கு பிறகு சிஎஸ்கே ஸ்பின்னர்களை வைத்து அட்டாக் செய்தது. மேலும் ஸ்பின் ஓவர்களில் ஆர்சிபி வீரர்களால் ரன்கள் அடிக்கவே முடியவில்லை. இதற்கு காரணம் பந்து திரும்பியது, கிரிப் ஆகியவற்றின் காரணமாக ரன்கள் அடிப்பது சிரமமாக இருந்தது.

ஆர்சிபிக்காக மைதானத்திற்கு வந்த ஜாம்பவான் கெயில் – கிறிஸ் கெயிலுடன் போட்டோ எடுத்துக் கொண்ட ரிஷப் ஷெட்டி!

எனினும், விராட் கோலி மற்றும் ஃபாப் டூப்ளெசிஸ் இருவரும் கஷ்டப்பட்டு ஓவருக்கு ஒரு பவுண்டரி என்று அடித்தனர். இதில், விராட் கோலி 29 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் 10 ஓவர்களில் ஆர்சிபி 78 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர், ஃபாப் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

அவர் 39 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியைப் பார்ப்பதற்கு ஆர்சிபி மகளிர் வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்ரேயங்கா பாட்டீல், நடிகர் ரிஷப் ஷெட்டி, ஆர்சிபி முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் ஆகியோர் நேரில் வருகை தந்துள்ளனர். இந்த நிலையில் தான் கன்னட நடிகரும், ஆர்சிபியின் தீவிர ரசிகருமான ஷிவராஜ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் முக்கியமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இன்று நமது ஆர்சிபி அணி வெற்றி பெறும் என்று ஆர்சிபி ஜெர்சியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹர்திக் பாண்டியாவுக்கு 3ஆவது முறையாக அபராதம்: 2025 ஐபிஎல் முதல் போட்டியில் விளையாட தடை!

 

ಯೋ ಬರ್ಕಯ್ಯ.. ಪೇಪರ್ ಮುಂದಾಗಡೆ ಬರ್ಕೊ, ಇವತ್ತು ಗೆಲ್ಲೋದು ನಮ್ ಹುಡುಗರೇ.. pic.twitter.com/0zHVO0xGJc

— DrShivaRajkumar (@NimmaShivanna)

 

click me!