எம் சின்னச்சுவாமி மைதானத்தில் நடைபெற்று வரும் 68ஆவது லீக் போட்டியில் ஆர்சிபிக்கு ஆதரவு தெரிவிக்க ஆர்சிபி மகளிர் அணி வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷ்ரேயங்கா பட்டீல் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
பெங்களூரு சின்னச்சுவாமி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 68ஆவது லீக் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி 4ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்கிறது. டாஸ் போடப்படும் போது மழை இல்லாத நிலையில், போட்டி தொடங்கி 20 நிமிடங்களில் மழை குறுக்கீடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே போட்டியானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிளே ஆஃப் யாருக்கு? நாக் அவுட் போட்டியில் டாஸ் ஜெயிச்ச ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங் தேர்வு!
தற்போது வரையில் ஆர்சிபி 3 ஓவர்களில் 31 ரன்கள் எடுத்துள்ளது. இதில், விராட் கோலி 9 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி உள்பட 19 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இதே போன்று ஃபாப் டூப்ளெசிஸ் 9 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 12 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
இந்தப் போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற வேண்டி ஆதரவு தெரிவிக்க ஆர்சிபி மகளிர் அணி வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷ்ரேயங்கா பட்டீல் ஆகியோர் வருகை தந்துள்ளனர். இந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி மகளிர் அணி டிராபியை வென்று ஆர்சிபிக்கு பெருமை சேர்த்தது.
கஜினி சூர்யா கெட்டப்புக்கு மாறிய கோலி – விராட்டின் நியூ ஹேர்ஸ்டைல் டிரெண்டிங்!
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, மிட்செல் சாண்ட்னர், சிமர்ஜித் சிங், மகீஷ் தீக்ஷனா.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
விராட் கோலி, ஃபாப் டூப்ளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், ரஜத் படிதார், கேமரூன் க்ரீன், மகிபால் லோம்ரார், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கரண் சர்மா, யாஷ் தயாள், லாக்கி பெர்குசன், முகமது சிராஜ்.
இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 33 போட்டிகளில் ஆர்சிபி 10 போட்டிகளிலும், சிஎஸ்கே 22 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. இந்த சீசனில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தல ஸ்டைலில் சொல்லனும்னா, ஆடாம ஜெயிக்க போகும் சிஎஸ்கே – மழையால் ஆர்சிபிக்கு ஆபத்து!
சின்னச்சுவாமி மைதானத்தில் இரு அணிகளும் மோதிய 10 போட்டிகளில் ஆர்சிபி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சிஎஸ்கே 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. ஒட்டு மொத்தமாக சின்னச்சுவாமி மைதானத்தில் ஆர்சிபி விளையாடிய 90 போட்டிகளில் 42 போட்டிகளில் வெற்றியும், 43 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.
ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. 4 போட்டிகளுக்கு முடிவு இல்லை. இரு அணிகளுக்கும் இடையில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 33 இன்னிங்ஸில் விளையாடி 1020 ரன்கள் எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 90* ரன்கள் எடுத்துள்ளார்.
ஹர்திக் பாண்டியாவுக்கு 3ஆவது முறையாக அபராதம்: 2025 ஐபிஎல் முதல் போட்டியில் விளையாட தடை!
எம்.எஸ்.தோனி விளையாடிய 32 போட்டிகளில் 751 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 84* ரன்கள் எடுத்துள்ளார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் ரவீந்திர ஜடேஜா 21 இன்னிங்ஸ் விளையாடி 19 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் விராட் கோலி 13 போட்டிகளில் 1 சதம், 5 அரைசதம் உள்பட 661 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கிறார். அதிகபட்சமாக 113* ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும், பர்பிள் கேப் வைத்திக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 583 ரன்களுடன் 2ஆவது இடத்தில் இருக்கிறார். இதில், ஒரு சதம், 4 அரைசதம் அடங்கும். அதிகபட்சமாக 108* ரன்கள் எடுத்துள்ளார்.