கஜினி சூர்யா கெட்டப்புக்கு மாறிய கோலி – விராட்டின் நியூ ஹேர்ஸ்டைல் டிரெண்டிங்!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 67ஆவது லீக் போட்டிக்கு முன்னதாக விராட் கோலி புதிய ஹேர்ஸ்டைல் லுக்கிற்கு மாறிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

Virat Kohli New HairStyle
கிரிக்கெட் மற்றும் சினிமா பிரபலங்கள் எப்படி இருக்கிறார்களோ அவர்களைப் போன்று ஹேர்ஸ்டைல், உடை அணிந்து கொள்வதை ரசிகர்கள் விரும்புவார்கள். ஸ்டைலிஸான கிரிக்கெட் வீரர்களின் தோனி மற்றும் விராட் கோலி முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
Hairstyle for Men
எப்போதும் தோனியைப் போன்றும், விராட் கோலியைப் போன்றும் ஹேர்ஸ்டைல் வைத்துக் கொள்ள ரசிகர்கள் விரும்புவார்கள். அடிக்கடி தங்களது ஹேர்ஸ்டைலை மாற்றிக் கொள்வார்கள்.
Virat Kohli New HairStyle
கிரிக்கெட் மற்றும் சினிமா பிரபலங்கள் எந்த ஹேர்ஸ்டைல்களில் இருக்கிறார்களோ அதே போன்று ஹேர்ஸ்டைலுக்கு ரசிகர்கள் மாறுவது என்பது இயல்பான ஒன்று தான். ஒன்று ஒரு லெஜெண்ட் மற்றொரு ஜாம்பவான் போன்று மாறுவது சற்று வேடிக்கையாக இருக்கிறது. இது அவர் மீது வைத்த அன்பினால் கூட இருக்கலாம்.
Virat Kohli New HairStyle
அப்படி என்ன என்று கேட்டால், ஐபிஎல் தொடரில் கடந்த சில சீசன்களுக்கு முன்பு தோனி என்ன ஹேர்ஸ்டைலுடன் இருந்தாரோ அதே போன்ற ஒரு ஹேர்ஸ்டைலுக்கு விராட் கோலி மாறியிருக்கிறார். இந்த புகைப்படம் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலானது.
Virat Kohli New HairStyle
இதைத் தொடர்ந்து தற்போது விராட் கோலி நியூ ஹேர்ஸ்டைலுக்கு மாறியுள்ளார். முடியை நன்றாக வெட்டி மொட்டை தலையுடன் இருப்பது போன்று தோற்றமளிக்கிறார். அதே போன்று தாடியையும் டிரிம் செய்துள்ளார். இந்த புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
Virat Kohli New HairStyle
இன்று பெங்களூருவில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 67ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விளையாடுகிறது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றால் 4ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். ஆனால், ஆர்சிபி 18 ரன்கள் அல்லது 18.1 ஓவர்களில் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.